தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.8.11

அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் நார்வே மாதிரி தாக்குதல்களாகும்-ஒபாமா

வாஷிங்டன்:செப்டம்பர் 11 தாக்குதல் போன்ற தாக்குதல்களை விட தற்பொழுது அமெரிக்கா சந்திக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் நார்வேயில் நடந்தது போன்ற தனி நபரின் தாக்குதலாகும் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார். அதேவேளையில் அல்காயிதாவிடமிருந்து வரும் தாக்குதல் மிரட்டலை புறந்தள்ளிவிடமுடியாது எனவும் ஒபாமா தெரிவித்துள்ளார்.

உலக வர்த்தக மையம் தாக்கப்பட்ட பத்தாவது ஆண்டு நினைவு தினமான செப்டம்பர் 11-ஆம் தேதி உஸாமாவை கொன்றதற்கு பழிவாங்கும் விதமாக தாக்குதல் நடத்தக்கூடும் என ஒபாமா எச்சரிக்கை விடுத்தார்.
அப்பொழுது கூட இத்தகைய திட்டமிட்ட தாக்குதல்களை விட எச்சரிக்கையாக இருக்க வேண்டியது நார்வேயில் நடந்தது போன்ற தனிநபர் தாக்குதலையாகும்.பாதுகாப்பு ஏஜன்சிகளுக்கு இதுக்குறித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஒபாமா தெரிவித்தார். கடந்த சில மாதங்களுக்கு இடையே அமெரிக்காவில் இத்தகைய தனிநபர் தாக்குதல்கள் நடந்தேறியுள்ளன.

0 கருத்துகள்: