புதுடெல்லி, ஆக. 19- சிறையிலிருந்து ஹசாரே நாளை தான் வெளியே வருவார் என்பதால், டெல்லி ராம் லீலா மைதானத்தில் நாளை முதல்தான் ஹசாரே தமது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திகார் சிறையில் அன்னா ஹசாரேவை பரிசோதித்த டாக்டர்கள் குழுவினர் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்தனர். எனினும் 15 நாட்கள் உண்ணாவிரதம்
நடத்த உள்ள ராம்லீலா மைதானம் இன்னும் முழுமையாக தயார் செய்யப்படாததால், சிறையில் இருந்து நாளை தான் அவர் வெளியே வருவார் என்று ஹசாரே குழுவில் இடம்பெற்றுள்ள அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.ராம்லீலா மைதானத்தின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஹசாரவிடம் பேசினேன். அவர் நாளை தான் ராம்லீலா மைதானத்துக்கு வருவார். ராம்லீலா மைதானத்தை டெல்லி மாநகராட்சி தயார் செய்து எங்களிடம் ஒப்படைக்கும். அதன்பின் நாங்கள் மேடை உள்ளிட்டவற்றை தயார் செய்வோம். அதெல்லாம் தயார் செய்து முடித்த பின்னரே ஹசாரே திகாரில் இருந்து புறப்படுவார் என்று அவர் மேலும் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக