சிரிய சர்வாதிகாரி பஸார் அல் ஆஸாத்தை திருத்தவும், பொது மக்கள் மீதான தாக்குதல்களை தடுக்கவும் எடுத் த முயற்சிகள் எல்லாமே வீணாகிவிட்டன. நேற்று ரூ னிசியாவில் போராளிகள் அமைப்பான சிரிய நண்பர்க ள் அமைப்புடன் முக்கிய பேச்சுக்கள் நடைபெற்றுள்ளன . டேனிஸ் வெளிநாட்டு அமைச்சர் வில்லி சுவிண்டேலு ம் இதில் முக்கிய பேச்சாளராக பங்கேற்றார்.சிரியாவில் நடைபெறும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும், அங்கு நடைபெறும் சிக்கல்களுக்கு முடிவு காண
வேண்டும் எ ன்ற நோக்கில் இந்த சந்திப்பு
நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கடைசி முயற் சியாக உடனடி யுத்த நிறுத்தத்திற்கான கோரிக்கையை சிரிய நண்பர்கள் குழு இன்று உத்தியோக பூர்வமாக முன் வைத்தது. ஆனால் இந்தக் கோரிக்கையை ஆஸாட் ஏற்கப் போவதில்லை என்பது தெரிந்ததே. மேலும் இதனுடைய நோக்கம் வேறானது என்பதையும் சிரிய சர்வாதிகாரி அறிந்திருக்க நியாயமுண்டு.வேண்டும் எ ன்ற நோக்கில் இந்த சந்திப்பு
அதைத் தொடர்ந்து, சற்று முன்னர் வெளியான செய்திகளின்படி அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கிளரி கிளின்டன் சிரிய போராளிகளுக்கு ஏதாவது ஒரு வழியில் ஆயுதங்கள் போய்ச் சேர வேண்டும் என்று தெரிவித்தார். ஆஸாட்டின் தாக்குதல்களை தடுக்க அது அவசியம் என்றும் கூறினார். இப்போது அரபு லீக் நாடு ஒன்றில் இருந்து போராளிகளுக்கு ஆயுதங்கள் அனுப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. போராளிகள் தரப்பு ஆயுத மயப்படுத்தப்படுமானால் லிபியாவில் நடந்த நிகழ்வுகள் சிரியாவிலும் இடம் பெற வாய்ப்புண்டு. ஆனால் ஆயுதங்களை பெறும் போராளிக் குழுக்கள் ஓர் அரசியல் பேச்சு எட்டப்படும்போது ஆயுதங்களை மௌனிக்க வைக்க வேண்டும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.இது ஒருபுறம் நடைபெற…
ஆப்பகான் அதிபர் கர்சாய் குர்ரான் எரிப்பு பற்றி இன்றும் கடுமையான கருத்துக்களை முன் வைத்தார். குர்ரான் முஸ்லீம்களின் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பது தெரியாது அமெரிக்க படை அதிகாரி நடந்துள்ளார் என்று குறை கூறினார். மேலும் அவர் கூறும்போது, பரந்த அறிவும், ஞானமும் இல்லாத செயல் இதுவென்றும், இந்தச் செயலை செய்த படை அதிகாரிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் இது குறித்த அறிவிப்பு அமெரிக்க தரப்பில் இருந்து இன்னமும் வெளிவரவில்லை. சம்மந்தப்பட்ட அதிகாரி ஒரு குர்ரானை எரிக்கவில்லை பல குர்ரான் பிரதிகளை போட்டு கொழுத்தியுள்ளமை கவனிக்கத்தக்கது.
மேலும் நேற்று வியாழனும் ஆப்கானில் அமெரிக்காவிற்கு எதிராக குர்ரான் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. இத்தருணம் ஆப்கான் இராணுவத்தினன் ஒருவன் சட்டென துப்பாக்கியை திருப்பி அமெரிக்க படையினர் மீது சுட்டபோது இரண்டு படையினர் மரணமடைந்தார்கள். நேற்று அமெரிக்க அதிபர் பகிரங்க மன்னிப்பு கோரினாலும் கோபம் அடங்கியதாக இல்லை.
அமெரிக்க அதிபர் போல இன்று ஜேர்மனிய சான்சிலர் அஞ்சலா மேர்க்கலும் ஜேர்மனியில் நடந்த சம்பவம் ஒன்றுக்காக மன்னிப்பு கோரினார். கடந்த 2000 முதல் 2007 வரை ஜேர்மனியில் ஏழு வெளிநாட்டு பின்னணி கொண்டவர்களும், ஒரு ஜேர்மனிய பெண் போலீசாரும் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களைக் கொன்றவர்கள் குறித்த சரியான நடவடிக்கைகளை எடுக்காது ஜேர்மனிய போலீசார் அசமந்தப் போக்கைக் கடைப்பிடித்தமைக்காகவே அவர் மன்னிப்பு கேட்டார்.
இவர்கள் அனைவரும் இனத்துவேஷ அடிப்படையில் சிறு குழு நியூநாஜிகளால் கொல்லப்பட்டுள்ளார்கள். சுமார் மூன்று பேர் வரையான நியூ நாஜி குழுவினர் இதனுடன் தொடர்பு கொண்டுள்ளதாக தெரியவருகிறது. இவர்கள் மரணம் குறித்த அஞ்சலி நிகழ்வு நேற்று பேர்ளினில் அவர்களுடைய உறவினர்களால் நடாத்தப்பட்டபோது அதில் கலந்து கொண்டு மேர்க்கல் மேற்கண்ட பகிரங்க மன்னிப்பை முன் வைத்தார்.
உலகத் தலைவர்கள் இனவாதத் தாக்குதல்கள், மத வெறுப்பு தாக்குதல்கள் நடந்தால் தயக்கம் எதுவும் இன்றி வெளிப்படையான மன்னிப்பு கேட்கும் புதிய காலம் மலர்ந்துள்ளதை இந்த மன்னிப்பு காட்டுகிறது. அதேவேளை சிங்கள இனவாத அரசு இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு இதுவரை ஒரு மன்னிப்பு கேட்டதாக வரலாறு இல்லை. ஆகவேதான் சர்வதேச சமுதாயத்தின் குற்றவாளி பிடிக்குள் சிக்குப்பட்டுள்ளார்கள் என்பது கவனிக்கத்தக்கது. இனவாத தலைவர்களுக்கும், சர்வாதிகார ஆட்சிகளுக்கும் இனியும் உலகில் இடமிருக்கும் என்று கருத முடியாத நிலை உருவாகி வருவதை இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. சிறீலங்கா அரசும் உலக சமுதாயத்தை மதித்து நடக்காவிட்டால் ஆஸாட்டைப் போல அவலமான நிலைக்கு தள்ளப்படலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக