தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.1.11

சீனாவுக்கு பை... இந்தியாவுக்கு ஹாய்! - ஜப்பான் முதலீட்டாளர்கள் முடிவு

டோக்யோ: ஜப்பானிய முதலீட்டு நிறுவனங்களை ஈர்ப்பதில் சீனாவை ஓரங்கட்டிவிட்டது இந்தியா.

இன்றைய தேதிக்கு தொழில் தொடங்க ஜப்பானிய நிறுவனங்களின் முதல் சாய்ஸ் இந்தியாதான்.

இந்தியா - சீனா இரு நாடுகளிலுமே மார்க்கெட் பொருளாதார முறை அமலுக்கு வர ஆரம்பித்தது 1992-ம் ஆண்டு முதல்தான். தாராளமயம் என்ற பெயரில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ரத்தினக் கம்பளம் விரிக்க ஆரம்பித்தன இரு நாடுகளும். யார் அதிக முதலீட்டாளர்களை ஈர்ப்பது என்பதில் பெரும் போட்டியே நிலவியது. சலுகைகளை அள்ளி வழங்கின.

சர்வதேச பொருளாதாரத்தில் முன்னிலை வகிக்கும் ஜப்பானின் நிறுவனங்கள் தங்களது நேரடி முதலீட்டுக்கு ஏற்ற நாடாக சீனாவையே கருதி வந்தனர். 

ஆனால் சமீபத்திய ஆய்வின்படி, ஜப்பானிய நிறுவனங்களைக் கவர்வதில் இப்போது சீனாவை விட இந்தியாவே முதலிடத்தில் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

சீனாவில் நிலவும் ஜப்பானிய விரோதப் போக்கு மற்றும் தொழிலாளருக்கான சம்பளப் பிரச்சினைகள்தான் இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

அடுத்த பத்தாண்டுகளில் தொழில் முதலீட்டுக்கு உகந்த நாடு எது என்று 605 ஜப்பானிய நிறுவனங்களிடம் மேற்கொள்ளப்பட்ட சர்வேயில், 74.9 சதவீத நிறுவனங்கள் இந்தியாதான் என பதிலளித்துள்ளன. ஆனால் குறுகிய கால முதலீடு என்று வரும்போது சீனாவை 77.3 சதவீதத்தினரும், இந்தியாவை 61 சதவீதத்தினரும் தேர்வு செய்துள்ளனர்.

வியட்னாம் மூன்றாவது இடத்தைப் பெறுகிறது

சங்பரிவாரை தடைச் செய்க - சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருவனந்தபுரம்,ஜன.9: தேசத்தை நடுங்கச் செய்த ஏராளமான குண்டுவெடிப்புகளின் பின்னணியில் செயல்பட்டது ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்க்பரிவார் அமைப்புகள்தான் என்பதை நீதிமன்றம் கண்டறிந்த சூழலில் தேசத்துரோக, நாச வேலைகளில் ஈடுபடும் சங்க்பரிவார அமைப்புகளை தடைச்செய்ய வேண்டுமென மனித உரிமை மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் நடந்துவரும் குண்டுவெடிப்புகள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் திட்டமிட்டு நடத்தியதுதான் என்பது தெளிவாகியுள்ள சூழலில் அவற்றின் மறைவில் வேண்டுமென்றே கொடிய சித்திரவதைகளுக்கு ஆளாக்கிய முஸ்லிம் இளைஞர்களை உடனடியாக விடுதலைச் செய்ய வேண்டுமெனவும், அவர்களுக்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் மனித உரிமை ஆர்வலர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ்ஸை தடைச்செய்ய வேண்டுமென காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரே கூறியிருப்பது தேசத்தின் பாதுகாப்பில் கவலைக் கொண்டவர்களுக்கு ஆறுதலை தருகிறது.

ஆனால், மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு இந்த அமைப்புகளை தடைச் செய்வதற்கு காலதாமதம் செய்யக்கூடாது. நீதிமன்றத்தின் முன்பு குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ள கொடிய பயங்கரவாதியான சுவாமி அஸிமானந்தாவின் பெயரை மாற்றி 'ஆஸிஃப் கஸ்மானி' என்ற முஸ்லிம் பெயரை சூட்டி சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பின் விசாரணையை திசை திருப்பிய வெளிநாட்டு சக்திகளைக் குறித்தும் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

குஜராத்தை மையமாக வைத்து செயல்படும் கேரள மாநிலத்தைச் சார்ந்த சுரேஷ் நாயரின் கேரள மாநில செயல்பாடுகளைக் குறித்து விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்.

சுரேஷ்நாயரை 'நய்யார்' என மாற்றி விசாரணையை திசை திருப்ப முயற்சிப்பவர்களை சட்டத்தின் முன்னால் கொண்டுவந்து நிறுத்தவேண்டும்.

காவி பயங்கரவாதத்திற்கு உத்வேகமளித்துக் கொண்டிருக்கும் மலையாள சினிமாத் துறையில் செயல்படும் பிரமுகர்களின் பொருளாதார பின்னணியைக் குறித்து விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொணர வேண்டும். இவ்வாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் மனித உரிமை மற்றும் சமூக ஆர்வலர்களான பேராசிரியர் டி.பி.விஜயகுமார், டாக்டர் பீம்ஜெயராஜ், ரமேஷ் நன்மண்டா, டாக்டர்.எஸ்.எம்.ஜெயப்பிரகாஷ், கஃபூர், முகுந்தன், பேராசிரியர் ராஜூ தாமஸ், ஜாஃபர்,வழக்கறிஞர் பி.ஆர்.சுரேஷ், பேராசிரியர் பஷீர், வழக்கறிஞர் எஸ்.பிரகலாதன், டாக்டர் உஸ்மான், வழக்கறிஞர் டி.எஸ்.ஜோஷி, அஷ்ரஃப், டாக்டர்.பி.கே.சுகுமாரன், வழக்கறிஞர் எ.ஜெயராம், வழக்கறிஞர் கெ.சுபாஷ் சந்திரன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்     நன்றி:knr times

சிபிஐக்கு ஆர்.எஸ்.எஸ். நோட்டீஸ்!

ஹைதராபாத் மக்கா மசூதி மற்றும் சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்புகளில் முக்கியக் குற்றவாளியான சுவாமி ஆசிமானந்தின் வாக்குமூலத்தை ஊடகங்களுக்கு சிபிஐ வேண்டுமென்றே வெளியிட்டுள்ளது என்று குற்ம் சாட்டி ஆர்.எஸ்.எஸ். சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆசிமானந்தின் வாக்குமூலத்தை வெளியிட்டிருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் ஆசிமானந்தின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்றெண்ணி வெளியிடப்படுள்ளது என்றும் ஆசிமானந்துக்கு நியாயமான விசாரணை மறுக்கப்படுவதாகவும் ஆர்.எஸ்.எஸ். தன்னுடைய நோட்டீஸில் கூறியுள்ளது.

அதிகாரிகள் தொடர்ந்து அதிகார துஷ்பிரயோகம் செய்தனர் என்றும் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தினார்கள் என்றும் சிபிஐயின் விசாரணை நேர்மையற்றதாக இருந்தது என்றும் ஆர்.எஸ்.எஸ். அந்த நோட்டீஸில் கூறியுள்ளது.

குஜராத் மாநிலம் டாங்க்ஸ் மாவட்டத்தில் உள்ள வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் தலைவரான சுவாமி ஆசிமானந்த், வெள்ளிக் கிழமையன்று மாஜிஸ்டிரேட் முன்னிலையில், 2007ஆம் ஆண்டு நடைபெற்ற சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பைக்குக் காரணம் நானே என்று ஒப்புதல் வாக்கு மூலம் அளித்ததாக தகவல் வெளியாகி இருந்தது.                                              நன்றி; இந்நேரம்                      

இந்திய படைகள் மீது சீனா துப்பாக்கிச் சூடு


குவஹாத்தி: எல்லைப் பகுதியில் சீன ராணுவம் சுட்டு இந்திய பாதுகாப்புப் படையினர் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இரு வாரங்களுக்கு முன் சி்க்கிம் எல்லையில் கெராங் என்ற இடத்தில் இந்தத் தாக்குதல் நடந்தது. இந்திய-சீன எல்லை பாதுகாப்பில் ஈடுபட்டு வரும் இந்தோ-திபெத்தியன் பார்டர் போலீஸ் (ITBP) மீது சீன ராணுவத்தினர் சுட்டனர். ஆனால், இந்தத் தகவலை மத்திய அரசு வழக்கம்போல் மூடி மறைக்க முயன்றது. ஆனாலும் தகவல் வெளியில் கசிந்துவிட்டது.

1996ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்திய-சீன ஒப்பந்தத்தையடுத்து இரு தரப்பும் இதுவரை துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதி்ல்லை. முதல் முறையாக இப்போது இந்த ஒப்பந்தத்தை சீனா மீறியுள்ளது.

கடந்த ஆண்டு சிக்கிமின் கெராங் பகுதிக்குள் சீன ராணுவ வாகனங்கள் 1 கி.மீ. தூரம் வரை ஊடுருவியது குறிப்படத்தக்கது.

இப்போது சீனா துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதையடுத்து கொல்கத்தா விரைந்த ராணுவத் தளபதி தீபக் கபூர், கிழக்கு மண்டல ராணுவ தளபதிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

1962ம் ஆண்டு இந்தியா- சீனா போர் நடந்தபோது காஷ்மீர் பகுதியில் 33 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பகுதியை சீனா ஆக்கிரமித்தது குறிப்பிடத்தக்கது.

இப்போது அருணாசல பிரதேசத்தை தனது பகுதி என்று கூறி வரும் சீனா காஷ்மீரின் லடாக் பகுதிக்கும் உரிமை கொண்டாடி வருகிறது. இந் நிலையில் தான் சிக்கிமில் இந்தியப் படைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

தாக்குதல் நடக்கவில்லை-வெளியுறவுத்துறை:

ஆனால், அப்படி ஒரு துப்பாக்கிச் சூடே நடக்கவில்லை என்று வழக்கம் போல் வெளியுறவுத்துறை மறுத்துள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு-6 பேர் பலி- பெண் எம்.பி. உயிர் ஊசல்

பீனிக்ஸ் (அமெரிக்கா): அமெரிக்காவின் டஸ்கான் நகரில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒரு பெண் எம்.பி. படுகாயமடைந்து உயிருக்கு ஊசலாடி வருகிறார். 6 பேர் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டனர்.

அவரது பெயர் கேப்ரியலே ஜிப்பார்ட்ஸ். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கங்கிரஸ் உறுப்பினர் இவர். ட்ஸகான் நகரில் உள்ள சேஃப்வே பலசரகக்குக் கடைக்குள் இன்று புகுந்த ஒரு மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார்.

இதில் கேப்ரியலே, ஒரு நீதிபதி உள்ளிட்ட 12 பேர் படுகாயமைடைந்தனர். இவர்களில் 6 பேர் உயிரிழந்து போயினர். கேப்ரியலேவுக்கு உயிருக்கு ஆபத்து இன்னும் நீங்கவில்லை. அவருக்கு அறுவைச் சிகிச்சை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக நெருக்கத்தில் வைத்து கேப்ரியலே சுடப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் எதற்காக இவ்வாறு நடந்து கொண்டார் என்பது தெரியவில்லை. இந்த சம்பவத்தால் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சி எழுந்துள்ளது.