ஆசிமானந்தின் வாக்குமூலத்தை வெளியிட்டிருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் ஆசிமானந்தின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்றெண்ணி வெளியிடப்படுள்ளது என்றும் ஆசிமானந்துக்கு நியாயமான விசாரணை மறுக்கப்படுவதாகவும் ஆர்.எஸ்.எஸ். தன்னுடைய நோட்டீஸில் கூறியுள்ளது.
அதிகாரிகள் தொடர்ந்து அதிகார துஷ்பிரயோகம் செய்தனர் என்றும் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தினார்கள் என்றும் சிபிஐயின் விசாரணை நேர்மையற்றதாக இருந்தது என்றும் ஆர்.எஸ்.எஸ். அந்த நோட்டீஸில் கூறியுள்ளது.
குஜராத் மாநிலம் டாங்க்ஸ் மாவட்டத்தில் உள்ள வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் தலைவரான சுவாமி ஆசிமானந்த், வெள்ளிக் கிழமையன்று மாஜிஸ்டிரேட் முன்னிலையில், 2007ஆம் ஆண்டு நடைபெற்ற சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பைக்குக் காரணம் நானே என்று ஒப்புதல் வாக்கு மூலம் அளித்ததாக தகவல் வெளியாகி இருந்தது. நன்றி; இந்நேரம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக