அவரது பெயர் கேப்ரியலே ஜிப்பார்ட்ஸ். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கங்கிரஸ் உறுப்பினர் இவர். ட்ஸகான் நகரில் உள்ள சேஃப்வே பலசரகக்குக் கடைக்குள் இன்று புகுந்த ஒரு மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார்.
இதில் கேப்ரியலே, ஒரு நீதிபதி உள்ளிட்ட 12 பேர் படுகாயமைடைந்தனர். இவர்களில் 6 பேர் உயிரிழந்து போயினர். கேப்ரியலேவுக்கு உயிருக்கு ஆபத்து இன்னும் நீங்கவில்லை. அவருக்கு அறுவைச் சிகிச்சை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக நெருக்கத்தில் வைத்து கேப்ரியலே சுடப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் எதற்காக இவ்வாறு நடந்து கொண்டார் என்பது தெரியவில்லை. இந்த சம்பவத்தால் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சி எழுந்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக