தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.2.11

பஹ்ரைன் மக்கள் எழுச்சி: ராணுவம் அடக்குமுறை - 4 பேர் மரணம்

மனாமா,பிப்.18:பஹ்ரைன் ( வீடியோ ) தலைநகரான மனாமாவில் பியர்ல் ரவுண்டபவுட்டில் அமைதியாக கூடியிருந்த மக்கள் மீது இன்று அதிகாலை ராணுவம் நடத்திய அநீதிமான துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் மரணமடைந்தனர்.நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஸல்மானியா மெடிக்கல் காம்ப்ளக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராணுவத்தின் தாக்குதலைத் தொடர்ந்து பின்வாங்கிய மக்கள் போலீசாருடன்

சென்னையில் கலைஞர் டி.வி. அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிரடி ரெய்டு

சென்னை, பிப். 18- ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரம் தொடர்பாக தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான கலைஞர் டி.வி., ஆபீசில் சி.பி.ஐ. அதிகாரிகள் நுழைந்து அதிரடி ரெய்டு நடத்தினர். நள்ளிரவு முழுவதும் நடந்த இந்த ரெய்டில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பரிசீலித்து நிர்வாக உறுப்பினர்களிடம் கேள்விக்கணைகள் மூலம் துளைத்தெடுத்து வருகின்றனர்.

லிபியாவிலு​ம் மக்கள் எழுச்சிப் போ​ராட்டம் வீடியோ

திரிபோலி,பிப்.17:அரபுலகில் கொளுந்துவிட்டெரியும் மக்கள் எழுச்சி லிபியாவிலும் பரவியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்களும், பாதுகாப்பு படையினரும், அரசு ஆதரவாளர்களும் மோதிக் கொண்டதில் 14 பேருக்கு காயமேற்பட்டது.( வீடியோ )
இன்று நாடுமுழுவதும் ‘கண்டன தினம்’ கடைப்பிடிக்க போராட்டத்தில் ஈடுபட்டோர் இணையதளம் மூலமாக அழைப்பு விடுத்துள்ளனர்.
கடந்த 1996-ஆம் ஆண்டு திரிபோலி சிறையில் நடந்த கலவரத்தில் கொலைச் செய்யப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறைக் கைதிகளின் 

லெபனானை தாக்குவோம் - இஸ்ரேல் மிரட்டல், கப்பலை தாக்குவோம் - ஹிஸ்புல்லாஹ் எச்சரிக்கை

டெல்அவீவ்,பிப்.17:தெற்கு லெபனானில் மீண்டும் ராணுவத்தை அனுப்புவோம் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யஹூத் பாரக் மிரட்டல் விடுத்துள்ளார்.

ஹிஸ்புல்லாஹ் போராளிகளை துரத்துவதற்காக எதிர்காலத்தில் தாக்குதல் நடத்துவோம். புதிய ராணுவத் தலைவராக பொறுப்பேற்றுள்ள பென்னி காண்ட்சுடன் லெபனானின் எல்லையில் நடத்திய சந்திப்பின்போது யஹூத் பாரக் இந்த மிரட்டலை விடுத்துள்ளதாக இஸ்ரேலின் ஹாரட்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது
.

நீதிமன்றத்தில் ரகசிய கடிதத்தை கொடுத்த அஸீமானந்த்

அஜ்மீர்,பிப்.17:இந்தியாவில் நடந்த பல குண்டுவெடிப்புகளின் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டிருக்கும் ஹிந்துத்துவ பயங்கரவாதி அஸீமானந்த், ரகசிய கடிதம் ஒன்றை நீதிமன்றத்தில் நேற்று சமர்பித்துள்ளார்.

மற்ற குற்றவாளிகள் முகேஷ் வாசனி மற்றும் ஹர்ஷத் சோலங்கிவுடன் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் படுத்தப்பட்ட அஸீமானந்த், ஜுடிசியல் மாஜிஸ்திரேட் ஆர்.எல்.மூன்ந்தின் முன் இக்கடிதத்தை சமர்பித்தார்.

திகார் சிறையில் முன்னாள் அமைச்சர் ராசா - மேலும் சில கைதுகள் தொடரலாம்..?


இந்தியாவின் முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு  அமைச்சர் ஆ.ராசாவை  நீதிமன்றக் காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டமையால், அவர்  திகார் சிறைக்கு
கொண்டு செல்லப்பட்டதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன