அஜ்மீர்,பிப்.17:இந்தியாவில் நடந்த பல குண்டுவெடிப்புகளின் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டிருக்கும் ஹிந்துத்துவ பயங்கரவாதி அஸீமானந்த், ரகசிய கடிதம் ஒன்றை நீதிமன்றத்தில் நேற்று சமர்பித்துள்ளார்.
மற்ற குற்றவாளிகள் முகேஷ் வாசனி மற்றும் ஹர்ஷத் சோலங்கிவுடன் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் படுத்தப்பட்ட அஸீமானந்த், ஜுடிசியல் மாஜிஸ்திரேட் ஆர்.எல்.மூன்ந்தின் முன் இக்கடிதத்தை சமர்பித்தார்.
ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கமான அபினவ் பாரத்தை சேர்ந்த அஸீமானந்த், இக்கடிதத்தை ரகசியமாக வைத்துக்கொள்ளும் படியும், கடிதத்தில் கூறியுள்ள விசயங்களை வெளியே தெரிவிக்க வேண்டாம் எனவும் மாஜிஸ்திரேடிடம் தெரிவித்தார்.
இம்மூவரின் நீதிமன்றக் காவல் வரும் மார்ச் 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேப்போல், மற்றொரு தீவிரவாதியான பாரத் பாயை ஏ.டி.எஸ். வரும் 18-ம் தேதியன்று ஆஜர்படுத்தும் என்று தெரிகிறது.
அஜ்மீர் குண்டு வெடிப்பு வழக்கில், தேவேந்தர், லோகேஷ் ஷர்மா மற்றும் சந்திரசேகர் ஆகியோரின் விசாரணையை மாஜிஸ்திரேட் பிப்ரவரி 19ம் தேதி விசாரிப்பார்.
Siasat

0 கருத்துகள்:
கருத்துரையிடுக