மனாமா,பிப்.18:பஹ்ரைன் ( வீடியோ ) தலைநகரான மனாமாவில் பியர்ல் ரவுண்டபவுட்டில் அமைதியாக கூடியிருந்த மக்கள் மீது இன்று அதிகாலை ராணுவம் நடத்திய அநீதிமான துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் மரணமடைந்தனர்.நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஸல்மானியா மெடிக்கல் காம்ப்ளக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராணுவத்தின் தாக்குதலைத் தொடர்ந்து பின்வாங்கிய மக்கள் போலீசாருடன்
நகரத்தின் பல பகுதிகளிலும்மோதலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து நகரத்தில் ராணுவம் களமிறங்கியது. ஆட்கள் கலைந்து சென்றபின் போர்க்களமாக காட்சியளித்த மனாமாவில் ராணுவம் ‘ரெட் அலர்ட்’ பிரகடனப்படுத்தியுள்ளது.
கூட்டம் சேர்வதும், பேரணி நடத்துவதும் தடைச் செய்யப்பட்டுள்ளது. திங்கள் கிழமை துவங்கிய போராட்டம் நேற்று நான்காவது நாளை எட்டிய நிலையில் மரண எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே ஸல்மானியா மருத்துவமனையில் போராட்டத்தில் காயமடைந்தவர்களுக்கு ஆம்புலன்ஸ் அளிக்கக்கோரி டாக்டர்களை தாக்கியதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.ஃபைஸல் பின் யாஃகூப் அல் ஹமரும் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் நாஸர் அல் பஹர்னாவும் ராஜினாமாச் செய்ததாக உறுதிச் செய்யப்படாத செய்திகள் கூறுகின்றன.
காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிட்சை அளிக்கவில்லை எனக்கூறி மருத்துவமனை வளாகத்தில் மோதல் சூழல் உருவானது. மரணித்தவர்களையும், காயமடைந்தவர்களையும் காணவந்த மக்கள் கூட்டம் மருத்துவமனையில் மன்னர், இளவரசர், பிரதமர் ஆகியோரின் படங்களை கிழித்தெறிந்தனர். பிரதமர் ராஜினாமாச் செய்ய வேண்டுமெனக்கோரிய மக்கள் தற்பொழுது மன்னருக்கு எதிராகவும் மாறியுள்ளனர்.
பெண்கள், குழந்தைகள் ஆகியோர் அடங்கிய மக்கள் கூட்டத்தின் மீது முன்னறிவிப்பு இல்லாமல் நடத்திய அக்கிரமமான துப்பாக்கிச்சூடு பஹ்ரைனின் நிலைமைகளை மேலும் மோசமாக்கியுள்ளது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை எனவும், பிரதமர் உடனடியாக ராஜினாமாச் செய்ய வேண்டுமெனவும் அரசியல் சட்டம் உறுதிச்செய்யும் உரிமைகளை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
செய்தி:மாத்யமம்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக