தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.2.11

எகிப்தில் முன்னாள் அமைச்சர்கள் 3 பேர் கைது


கெய்ரோ, பிப். 18 எகிப்தில் முன்னாள் அமைச்சர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எகிப்தில் மக்கள் கிளர்ச்சி காரணமாக அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக் தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஓட்டம் பிடித்துள்ள நிலையில், இராணுவத்தின் பிடியில் தற்போது ஆட்சி அதிகாரம் உள்ளது. இருப்பினும் இன்னும் சில மாதங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசிடம் ஆட்சியை ஒப்படைக்க தயாராக உள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், முன்னாள் உள்துறை அமைச்சர் ஹபீப் எல் ஹாட்லி மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஜுகீர் கரனா, வீட்டுவசதி துறை அமைச்சர் அகமத் அல் மக்ராபி மற்றும் தொழிலதிபர் அகமத் ஏஸ் பேர் கைது செய்யப்பட்டு 15 நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 
இதில் ஹபீப் மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை குற்றச்சாற்று சுமத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்: