தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.2.11

பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு :- அத்வானி பெயரை நீக்கிய அலஹாபாத் நீதிமன்ற தீர்ப்பு தவறு- சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!


பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் மீதான கிரிமினல் சதி குற்றச்சாட்டை நீக்கி அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.


பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி,உமாபாரதி, அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், வினய் கட்டியார், விஷ்ணு ஹரி டால்மியா, சாத்வி ரிதம்பாரா மற்றும் மஹாந்த் அவிதயா நாத் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட கிரிமினல் சதி குற்றச்சாட்டு நீக்கப்பட்டதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்திருந்தது.
அதில் இவர்கள் மீதான மேற்கூறிய குற்றச்சாட்டை மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என சிபிஐ விடுத்த வேண்டுகோளை கடந்த ஆண்டு மே மாதம் அலகாபாத் உயர் நீதிமன்றம் நிராகரித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து அலகாபாத் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
அம்மனுவில், அத்வானி உள்ளிட்டவர்களுக்கு எதிரான கிரிமினல் குற்றச்சாட்டை நீக்கும் விடயத்தில் அலகாபாத் உயர் நீதிமன்றம் சரியான முடிவெடுக்கவில்லை என்றும், எனவே அவர்களுக்கு எதிரான கிரிமினல் சதி குற்றச்சாட்டை மீண்டும் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மத்திய புலனாய்வு கழகமான சிபிஐ குறிப்பிட்டுள்ளது.
-வெப்துனியா

0 கருத்துகள்: