இஸ்லாமாபாத், பெனசிர் பூட்டோ கொலையாளிகளுக்கு பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முசரப் நேரடியாக உதவினார் என்று விசாரணைக் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
பெனசிர் பூட்டோ கொலை வழக்கை எப்ஐஏ எனப்படும் பாகிஸ்தான் புலனாய்வு ஏஜென்சி விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் முன்னாள் அதிபர் முசரப்பின் பெயரை சேர்க்க
வேண்டாம் என்று பல்வேறு தரப்பிலிருந்து நெருக்கடி வந்தபோதிலும், கொலையாளிகளுக்கு முசரப் நேரடியாக உதவினார் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளதாக கூறி அவரது பெயரை குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துள்ளதாக எப்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்ததாக தொலைக்கட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக