தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.3.11

மொகாலி மைதானத்தில் தொழுகை நடத்தியது புனிதப் போராம்: பால்தாக்கரேயின் பிதற்றல்


Always-this-scene-Pakistan-Cricket-Team-Prayer-in-Mohali-Stadium
மும்பை: ‘பல் போனால் சொல் போச்சு’ என்றதொரு பழமொழி நம்ம ஊர்களில் புழக்கத்தில் உள்ளது. பல்லிழந்த கிழட்டு சிங்கமான பால்தாக்கரேக்கு சொல்  மட்டுமல்ல புத்தியும் பேதலித்துவிட்டதை அவ்வப்போது அவர் வெளியிடும் அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே பால்தாக்கரேக்கு இரத்த அழுத்தம் சற்று அதிகமாகவே எகிறும்.நேற்று நடந்த இந்தியா-பாகிஸ்தான்

சிரியா மக்கள் புரட்சியின் முதல் வெற்றி : அமைச்சரவையை கலைத்தது அரசு


சிரியாவில், அரசுக்கு எதிராக தொடர்ந்த ஆர்ப்பாட்டங்களின் தீவிரத்தால்,
அந்நாட்டு அமைச்சரவை பதவி விலகியுள்ளது.இதனை அந்நாட்டு ஜனாதிபதி பஷார் அல் அல் அசாட் உறுதிப்படுத்தியுள்ளார்.

அங்கு இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் பலர் படுகொலை செய்யப்பட்டதை

நிரபராதிகளான முஸ்லிம்களின் புனர் வாழ்வுக்கு உதவுவோம்: தேசிய சிறுபான்மை கமிஷன்


header
அலிகர்:தீவிரவாதிகள் என குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களுக்கு புனர் வாழ்வுக்காக உதவுவோம் என தேசிய சிறுபான்மை கமிஷன் அறிவித்துள்ளது.
இவர்கள் குற்றமற்றவர்கள் என பரிபூரணமாக சட்டரீதியாக உறுதிச் செய்யப்பட்டால் புனர்வாழ்விற்கான நடவடிக்கைகள் துவங்கப்படும் என கமிஷனின் தலைவர் வஜாஹத்  ஹபீபில்லாஹ் தெரிவித்துள்ளார்.

யாரு ஹீரோ? யாரு காமடியன்? வடிவேலு-விஜயகாந்த்! அடியல் வீடியோ


நேற்று தொலைக்காட்சியில் இரண்டு பொதுக்கூட்ட பிரச்சார செய்தியைப் பார்க்க நேரிட்டது. (வீடியோ)
ஒரு கூட்டத்தில் வடிவேலு பேசிக்கொண்டிருந்தார். கலைஞரின் சாதனைகளையும், தேர்தல் அறிக்கையையும் மக்களிடம் விளக்கிக் கொண்டே வந்த அவர், "கலைஞர் அய்யா ஊனமுற்றவர்களுக்கு நிறைய சலுகைகளை அறிவிச்சிருக்காரு" எனப் பேசிவிட்டு, பின் அடுத்த நொடி, "அப்படி சொல்லக் கூடாது. தப்பு. மாற்றுதிறனாளிகள்னு சொல்லனும், என்னை மன்னிச்சுருங்க." என மன்னிப்புக் கேட்டுவிட்டு, "கலைஞர் மாற்றுதிறனாளிகளுக்கு நிறைய சலுகைகள் அறிவிச்சிருக்காரு"னு சொல்லிட்டு பேச்சைத் தொடர்ந்தார்.

சீனாவின் மேலாதிக்கம்! இலங்கையை உடைக்க இந்தியா திட்டம்!!

மார்ச் 30, தெற்காசியாவில் தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ளும் தீவிரமான முன்நகர்வாக இலங்கையை பிளவுபடுத்த இந்தியா மறைமுகமாகத் திட்டமிடுவதாக பாகிஸ்தானின் த நேஷன் பத்திரிகை நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்திருக்கிறது.

தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டலுக்காக சீனாவை நோக்கி இலங்கையின் பார்வை திரும்புகின்ற நிலையில் அதற்கு பாடம் கற்பிக்கும் நோக்கத்துடன் இவ்வாறு திட்டமிடுவதாக

ஹோஸ்னி முபாரக் வீட்டுக் காவலில் சிறை - இராணுவ சுப்ரீம் கவுன்சில் தகவல் வெளியீடு


எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக், சவுதி அரேபியாவுக்கு தப்பிச்சென்று விட்டதாக வெளிவந்துள்ள தகவல்களை மறுத்துள்ள இராணுவ தரப்பு,
அவர் இன்னமும் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியிட்டுள்ளது. எகிப்தின் சுப்ரீம் கவுன்சிலின் இராணுவ படையினர் நேற்று திங்கட்கிழமை இத்தகவலை வெளியிட்டுள்ளனர். 18 நாட்கள் எகிப்தில்

அச்சுதானந்தனை எதிர்த்து பா.ஜ.க. போட்டியில்லை -பா.ஜ.க.வுடன் கம்யூனிஸ்ட் கள்ளத்தொடர்பு வைத்துள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு


ஆழப்புழா:முதல்வர் அச்சுதானந்தனை எதிர்த்து பி.ஜே.பி. போட்டியிடாதது, கேரளாவில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மலப்புழா தொகுதியில்,பா.ஜ.கவிற்கு கணிசமான வாக்கு வங்கி இருந்தும் அங்கு பா.ஜ.க. வேட்பாளரை நிறுத்தாதது கம்யூனிஸ்ட் பா.ஜ.கவின் கள்ளத்தொடர்பை உறுத்திபடுத்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.

பெஷாவரில் போலீஸ் செக்போஸ்டிற்கு அருகே குண்டுவெடிப்பு: ஏழு பேர் மரணம்


3-30-2011_13090_l_u
பெஷாவர்:வடமேற்கு பாகிஸ்தானில் போலீஸ் செக்போஸ்டிற்கு அருகே நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் போலீஸ்காரர் உள்பட ஏழுபேர் கொல்லப்பட்டனர்.
40க்கும் மேற்பட்டோருக்கு காயமேற்பட்டது. மோட்டார் பைக்கில் வந்த நபர் ஸ்வாபி நகருக்கு அருகிலுள்ள அம்பர் செக்போஸ்டிற்கு அருகில் வந்தபொழுது உடலில் கட்டிய குண்டை வெடிக்கச் செய்தார்.