தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.1.11

மலேஷியாவில் ஒரு பாடப் புத்தகத்தால் சர்ச்சை


மலேஷியாவில் ஒரு பாடப் புத்தகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இந்திய வம்சாவழி மக்களை இழிவு படுத்துவதாக உள்ளது என்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
அந்நாட்டில் ‘ஓ’ லெவல் படிக்கும் மாணவர்களுக்கு மலாய் இலக்கியப் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ள ஒரு புத்தகத்தில், மலேஷியாவில் குடியேறியுள்ள இந்திய வம்சாவழி மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் கீழ் சாதி மக்கள் என்று பொருட்படும் வகையில் வாசகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக் கூறி எதிர்ப்பு எழுந்துள்ளது.
“ஏற்றுக் கொள்ள முடியாத அல்லது காலத்துக்கு ஒவ்வாத கருத்துக்களை கூறும் போது அது மலேஷியாவில் வசிக்கும் மலாய், சீன மற்றும் இந்தியர்கள் என்கிற மூவின மக்களின் ஒற்றுமையை பாதிக்கின்றது” என்று கோலாலம்பூரிலுள்ள வழக்கறிஞரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான பசுபதி சிதம்பரம் தமிழோசையிடம் தெரிவித்தார்.
பசுபதி சிதம்பரம் பேட்டி
ஆனால் சர்ச்சைகுரிய “இண்டர்லாக்” எனும் அந்தப் புதினத்தை எழுதியுள்ள 85 வயதான ஹுசைன் அப்துல்லா, சரித்திர சான்றுகளின் அடிப்படையில் தனது புத்தம் எழுதப்பட்டது எனவும் அதன் காரணமாக சர்ச்சைகுரிய பகுதிகள் நீக்கப்படாது எனவும் தெரிவித்துவிட்டதாகவும் பசுபதி சிதம்பரம் கூறுகிறார்.
இந்தப் புத்தகத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருவதாகக் கூற்படும் நிலையில், சரித்திர ரீதியிலான இலக்கியம் என்பதால் அதிலிருந்து எந்தப் பகுதியையும் நீக்கக் கூடாது என மலாய் எழுத்தாளர்கள் வாதிட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
தமது எதிர்ப்பை தெரிவித்த நிலையில் மலேஷிய அரசு சர்ச்சைகுரிய பகுதிகளை நீக்குவதாகவும் ஆனால் புத்தகத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துவிட்டதாகவும் பசுபதி சிதம்பரம் கூறுகிறார்.
மலேஷிய அரசின் இந்த நிலைப்பாடு ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் மூவின மக்களின் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படக் கூடிய வாய்ப்பு இருப்பதால், இப்புத்தகம் முழுமையாக திரும்பப் பெறப்பட வேண்டும் என தாங்கள் தொடர்ந்து வலியுறுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் கருத்து வெளியிட்டார்.
கல்வி, சமூக, கலாச்சாராம் மற்றும் பொருளாதார ரீதியாக மலேஷியாவில் இந்திய வம்சாவழித் தமிழர்கள் முன்னேறிக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர்களை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் அதிலும் குறிப்பாக மாணவர்களை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என்கிற ரீதியிலேயே இப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தாங்கள் கருதுவதாகவும் அவர் கூறுகிறார்.செய்தி :அலைகள் 

பி.பி.சி.ரேடியோ 7 மொழிகளின் சேவை நிறுத்தம்

லண்டன் அரசு ஒலிபரப்பு நிறுவனமான பி.பி.சி. நிறுவனம் ரேடியோ மற்றும் டி.வி. ஒலிபரப்புகளை நடத்தி வருகிறது. நீண்ட காலமாக பி.பி.சி. ரேடியோ 32 மொழிகளில் ஒலிபரப்பி வந்தது.
இந்திய மொழிகளான இந்தி, தமிழ், வங்காளம், நேபாளி மொழிகளிலும் ரேடியோ ஒலிபரப்புகள் உள்ளன. இவற்றில் ஆயிரக் கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிறுவனம் பிரிட்டிஷ் அரசின் நிதியுதவியுடன் இயங்கி வருகிறது.
இங்கிலாந்தில் புதிய கூட்டணியரசு பொறுப்பேற்றதிலிருந்து, பல செலவுகளைக் குறைக்க முடிவு செய்தது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பி.பி.சி.க்கு வழங்கும் உதவித் தொகையும் சுருக்கப்பட உள்ளது. ஏறக்குறைய ரூ. 2000 கோடியை, பிரிட்டிஷ் அரசு உதவித் தொகையாக பி.பி.சிக்கு அளித்து வருகிறது.
அடுத்த ஆறு ஆண்டுகளில் 16 சதவீதம் வரை இந்த உதவித்தொகையைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. எனவே, தனது உலக மொழிச்சேவைகளை சுருக்கிக் கொள்ளுவதென பி.பி.சி. முடிவு எடுத்துள்ளது.
இதற்காக 7 மொழிகளின் ஒலிபரப்பை நிறுத்த பி.பி.சி. முடிவு செய்துள்ளது. அல்பேனியன், வெசிடோனியன், போர்ச்சுகீஸ், ஆப்ரிக்கன், செர்பியன் மொழிகள் உள்ளிட்ட 7 ஒலிபரப்புகள் நிறுத்தப்படுகின்றன. இதனால் இந்த துறைகளில் பணியாற்றிய 650 ஊழியர்களும் வேலை இழக்கின்றனர்.
இந்த சேவைகளை ரத்து செய்வதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.300 கோடியை மிச்சப்படுத்தலாம் என பி.பி.சி. எதிர்பார்க்கிறது. உதவித் தொகையைக் குறைக்கும் அரசின் முடிவுக்கு இங்கிலாந்தின் தேசிய பத்திரிகையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சமீபத்தில் பி.பி.சி.யின் ஆன்லைன் சேவையில் 350 பேர் வேலை பறிபோயுள்ளது