லண்டன் அரசு ஒலிபரப்பு நிறுவனமான பி.பி.சி. நிறுவனம் ரேடியோ மற்றும் டி.வி. ஒலிபரப்புகளை நடத்தி வருகிறது. நீண்ட காலமாக பி.பி.சி. ரேடியோ 32 மொழிகளில் ஒலிபரப்பி வந்தது.
இந்திய மொழிகளான இந்தி, தமிழ், வங்காளம், நேபாளி மொழிகளிலும் ரேடியோ ஒலிபரப்புகள் உள்ளன. இவற்றில் ஆயிரக் கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிறுவனம் பிரிட்டிஷ் அரசின் நிதியுதவியுடன் இயங்கி வருகிறது.
இங்கிலாந்தில் புதிய கூட்டணியரசு பொறுப்பேற்றதிலிருந்து, பல செலவுகளைக் குறைக்க முடிவு செய்தது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பி.பி.சி.க்கு வழங்கும் உதவித் தொகையும் சுருக்கப்பட உள்ளது. ஏறக்குறைய ரூ. 2000 கோடியை, பிரிட்டிஷ் அரசு உதவித் தொகையாக பி.பி.சிக்கு அளித்து வருகிறது.
அடுத்த ஆறு ஆண்டுகளில் 16 சதவீதம் வரை இந்த உதவித்தொகையைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. எனவே, தனது உலக மொழிச்சேவைகளை சுருக்கிக் கொள்ளுவதென பி.பி.சி. முடிவு எடுத்துள்ளது.
இதற்காக 7 மொழிகளின் ஒலிபரப்பை நிறுத்த பி.பி.சி. முடிவு செய்துள்ளது. அல்பேனியன், வெசிடோனியன், போர்ச்சுகீஸ், ஆப்ரிக்கன், செர்பியன் மொழிகள் உள்ளிட்ட 7 ஒலிபரப்புகள் நிறுத்தப்படுகின்றன. இதனால் இந்த துறைகளில் பணியாற்றிய 650 ஊழியர்களும் வேலை இழக்கின்றனர்.
இந்த சேவைகளை ரத்து செய்வதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.300 கோடியை மிச்சப்படுத்தலாம் என பி.பி.சி. எதிர்பார்க்கிறது. உதவித் தொகையைக் குறைக்கும் அரசின் முடிவுக்கு இங்கிலாந்தின் தேசிய பத்திரிகையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சமீபத்தில் பி.பி.சி.யின் ஆன்லைன் சேவையில் 350 பேர் வேலை பறிபோயுள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக