தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.8.11

இந்தியாவில் இன்று ஈகைத் பெருநாள் கொண்ணடாட்டம்

இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் இன்று ஈத் சிறப்பு தொழுகையை தொழுதுவிட்டு ஈகைப்பெருநாளை உற்றார் உறவிணர்களுடன் உற்சாகமாக கொண்டாடிவரும் இவ்வேளையில் நாமும் அவர்களுக்கு ஈத் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.  அன்புடன் : தண்ணீர்குன்னம்.நெட்  இணையதளம் ஆசிரியர்  


ஃபலஸ்தீனர்கள் சோகத்துடன் வரவேற்ற ஈத்


imagesCACFJRMF
காஸா:சொந்த பந்தங்களிடமும், நண்பர்களிடமும் மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டு ஈதை வரவேற்கும் முஸ்லிம்களிடையில் சோகத்துடன் இந்த ஈதை வரவேற்கிறார்கள் காஸா பகுதியிலுள்ள ஃபலஸ்தீன குடிமக்கள்.
சமீபத்தில் இஸ்ரேல் அவர்கள் மேல் நடத்திய ஈன இரக்கமற்ற வான்வழித் தாக்குதலே இதற்குக் காரணம். இதில் குறைந்தது

லிபியா: கதாபியின் மனைவி, மக்கள் அல்ஜிரியாவில்! கதாபி எங்கே?


Safia-Gaddafi-007
அல்ஜீயர்ஸ்:லிபிய அதிபர் முஅம்மர் கதாபியின் மனைவி, இரு மகன்கள், ஒரு மகள் ஆகியோர் இன்று (திங்கள்கிழமை) அல்ஜீரியா வந்தடைந்துள்ளதாக அல்ஜீரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
“கதாபியின் மனைவி ஸஃபியா, அவரின் மகள் ஆயிஷா, மகன்கள் ஹன்னிபால், முஹம்மத், அவர்களின் குழந்தைகள் ஆகியோர் அல்ஜீரியாவுக்குள் காலை 8.45 மணிக்கு

அமீரகத்தில் ஈகைத் திருநாள் கொண்டாட்டம்! துபாய் ஈத்கா திடலில் மக்கள் உற்சாகம்!

துபாய்:ஒரு மாத காலம் நோன்பு நோற்று, இறை தியானத்தில் திளைத்த மக்கள் இன்று(ஆக:30) அமீரகத்தில் ஈகைத் திருநாளை வெகு சிறப்பாக கொண்டாடினர்.

அமீரகத்தின் துபாய் நகரில் உள்ள தேரா ஈத்கா திடலில் மக்கள் பெருநாள் சிறப்பு தொழுகையை தொழுதனர்.
காலை 5:30 மணி முதலே மக்கள் ஈத்கா திடலை நோக்கி அலை மோதத் தொடங்கினர். தக்பீர் ஒலி முழக்கம் விண்ணை முட்டியது. 6.20 மணியளவில்

30.8.11

வளைகுடா மக்களுக்கு ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்

தண்னீர்குன்னம் இணையதளம் வளைகுடா மக்களுக்கு ஈத் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

வளைகுடா நாடுகளில் இன்று ரம்ஜான் பண்டிகை


 சவூதி தலைநகர் ரியாதில் நேற்றிரவு பிறை தென்பட்டதையடுத்து இன்று (30.08.2011) செவ்வாய்க்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று சவூதி அரசு தெரிவித்துள்ளது மேலும் வளைகுடா நாடுகளும் இன்று ரம்ஜான் பண்டிகையை கொண்டாட உள்ளன.
உலகமெங்கும் உள்ள முஸ்லிம்கள் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு வைத்து வருகின்றனர் இம்மாத முடிவில் ஷவ்வால் மாதம் முதல் பிறையை கண்டு தங்கள் நோன்பை

லோக்பால் மூலம் மிகப்பெரிய அற்புதத்தை எதிர்பார்க்க முடியாது: நீதிபதி சந்தோஷ் ஹெக்டே


imagesCANOC2G7
பெங்களூரு:லோக்பால் மசோதாவுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதேசமயம், மிகப் பெரிய அற்புதத்தை நாம் எதிர்பார்க்க முடியாது என்று நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறியுள்ளார்.
ஹஸாரே குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக திகழ்ந்தவர் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே. ஜனலோக்பால் வரைவு மசோதாவை உருவாக்கிய குழுவில் இவரும் ஒரு முக்கிய உறுப்பினர். இருப்பினும் அன்னா ஹஸாரேவின் போராட்ட முறையால் அதிருப்தி அடைந்து அதிலிருந்து விலகியிருந்தார் ஹெக்டே.

போலி என்கவுண்டர் செய்பவர்களுக்கு தூக்குதண்டனை - உச்ச நீதிமன்றம்


சென்னை: தப்பியோடும் குற்றவாளிகளை சுட்டுக்கொல்கிறோம் என்ற பெயரில் தற்போது பல அப்பாவி முஸ்லிம்களை காவல்துறையினர் என்கவுண்டர் என்ற பெயரால் போட்டுத் தள்ளுகின்றனர் இப்படி “போலி என்கவுன்டர் செய்யும் காவல்துறையினர் தூக்குத் தண்டனைக்கு தகுதியானவர்கள் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டே கட்ஜூ கூறியுள்ளார்.

எனது தந்தையை காப்பாற்ற தமிழ்நாட்டுக்கு வந்து போராட விரும்புகிறேன்


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனு நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதனால் அவர்களுக்கு வரும் 9-ந்தேதி வேலூர் ஜெயிலில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
 
ராஜீவ்காந்தி கொலையாளிகள் 3 பேரின்

29.8.11

நாசரேத்தில் மசூதி இடிக்க முயற்சி: வகுப்பு கலவரம் மூளும் அபாயம்!


தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் மசூதி ஒன்றை இடிக்க முயற்சி நடப்பதால், அப்பகுதியில் வகுப்பு கலவரம் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாசரேத் என்ற கிராமம் உள்ளது. இங்கு 1950ம் ஆண்டுக்கு முன்னால் முஸ்லிம் சமுதாயத்தினர் பெருவாரியாக வசித்து வந்தனர். அந்த நேரத்தில் ஏற்பட்ட தொற்று நோயின் காரணமாக ஏராளமான முஸ்லிம்கள் ஊரைக் காலி செய்து பல்வேறு ஊர்களுக்க்ச் சென்று விட்டனர். அப்போது அவர்கள் விட்டுசென்ற 76 ஏக்கர் நிலம் தற்போது பெருவாரியாக அபகரிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஒரு மசூதியும் இப்பகுதியில் உள்ளது. இந்த மசூதி காலப்போக்கில் பாழ‌டைந்து போனது.

36 பாகிஸ்தான் படைவீரர்கள் படுகொலை


25officialsofChitralScoutskilledinattack_31654
இஸ்லாமாபாத்:ஆப்கான் போராளிகள் வடமேற்கு எல்லையில் பாகிஸ்தானின் இராணுவப் படையுடன் நடத்திய தாக்குதலில்326 பேர் கொல்லப்பட்டனர். குடிமக்களின் வீடுகளை நோக்கியும் குண்டு மழை பொழிந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இராணுவப் படைவீரர்களும், போலீஸ்காரர்களும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர்.
சித்ரல் என்ற பகுதியைச் சேர்ந்த அரந்து

குறைவான தூக்கம் உடலுக்கு கேடு விளைவிக்கும்! ஆய்வில் !


தூங்காதே தம்பி தூங்காதே என்ற பாட்டினை கேட்டிருப்பீர்கள்.ஆனால் தூங்கினால்தான் ஆற்றல் கிடைக்கும் என்பதையும் நாம் உணர வேண்டும். நாள் முழுவதும் உழைக்கும் நம்முடைய உடல் உறுப்புகள் ஓய்வெடுக்க தூக்கம் அவசியமாகிறது. 

சில நாட்கள் தூங்காமல் இருந்தால் ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து நோய் எதிர்ப்பு தன்மையும் குறையும்..

தனி தனி அறைகளுக்குள் பேரறிவாளன், முருகன், சாந்தன்

தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தனை தனித் தனி அறையில் அடைத்துள்ளனர். 24 மணி நேரமும் அவர்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு வரும் 9-ம் தேதி் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இந்த செய்தியைக் கேட்ட அந்த மூவரும் அதிர்ச்சியில்

28.8.11

நீதிபதிக்கு ரேட்வைத்த ஜெயேந்திரனை தூக்கில்போட ஜன்லோக்பால் அம்பிகள் தயாரா?


குண்டாஸ் ஜெயேந்திரர்
ஊழலுக்கு எதிரான உலகப் போரை துவங்கியிருப்பதாக பீற்றிக் கொள்ளும் இவர்கள் பெரிய அம்பி ஜெயேந்திரனுக்கு ஒரு தூக்கோ, என்கவுண்டரோ ஏற்பாடு செய்வார்களா?
பண ஆதாயத்திற்காக நடக்கும் ஊழலை விட, கொலை செய்துவிட்டு நீதிபதியையே விலைக்கு வாங்கும் ஊழல் பஞ்சமா பாவங்களையும் விட மோசமில்லையா? அப்பேற்பட்ட விஸ்வரூப ஊழலை காஞ்சி மட ஜெயேந்திரன் செய்திருப்பது சமீப நாட்களாக ஊடகங்களில் யாரும் கவனிக்கப்படாமல் ஓரமாய் ஒதுங்கியிருக்கிறது. அதை ஊழல் எதிர்ப்பு போராளிகளின் கவன வெளிச்சத்திற்கு இழுத்துக் கொண்டு வருகிறோம்.முதலில் சுருக்கமாக பிளாஷ் பேக்: காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் 3.9.2004 அன்று ‘ஆண்டவன்’ சன்னிதானமான அந்த கோவில் வளாகத்திலேயே கொல்லப்பட்டார்.

குஜராத்:மோடி அரசை மீறி ஆளுநர் லோகாயுக்தாவை நியமித்தார்


gujaratgov-modi-295
காந்திநகர்:மோடி அரசை மீறி குஜராத் மாநில ஆளுநர் லோகாயுக்தாவை எதிர்பாராதவிதமாக நியமித்துள்ளார்.
முந்தைய வழக்கங்களை மீறி ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.எ.மேத்தாவை ஆளுநர் தலைவராக தேர்வுச் செய்துள்ளார். முன்னர் ஆர்.எ.மேத்தாவை லோகாயுக்தவாக உயர்நீதிமன்றம் அரசுக்கு சிபாரிசுச் செய்திருந்தது. ஆனால்,இதுவரை அரசு நடவடிக்கை மேற்கொள்ளாததைத்

ஹசாரேவின் நிபந்தனைகள் ஏற்பு : இன்று உண்ணாவிரதம் முடிவு!


அன்னா ஹசாரே முன்வைத்த மூன்று நிபந்தனைகளையும் உள்ளடக்கிய லோக்பால் மசோதா மக்களவையில் (லோக்சபா மற்றும் ராஜ்யசபா இரண்டிலும்) ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார். இதற்கு ஹசாரே குழுவினரும் வரவேற்பு அளித்ததுடன், ஹசாரே இன்று காலை உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வார் என தெரிவித்துள்ளனர்.
நேற்று காலையில் மக்களவை

பிராணிகள் வளர்க்க துவங்கிய காலத்தை மாற்றிய சவுதி அகழ்வாராய்ச்சி


சவுதி அரேபியாவில் சுமார் 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு குதிரைகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அகழ்வாராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
சவுதி அரேபியாவில் சில பகுதிகளில் நடத்திய சோதனையில் புதிய அகழ்வாராய்ச்சி தலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்கு நடத்திய ஆராய்ச்சியில் அல்-மாகர் என்ற

10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டு விரைவில் புழக்கத்துக்கு வருகிறது


இதற்காக தற்போதைய காகிதத்துக்கு பதிலாக பாலிமரால் ஆன ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க முடிவு செய்துள்ளது. இந்த பாலிமர் (பிளாஸ்டிக்) ரூபாய் நோட்டுகள் முதலில் ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
 
இதை தொடர்ந்து நியூசிலாந்து, நியூசிரியா, ருமேனியா, பர்முடா, புருனே, வியட் நாம் ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.

சாந்தன், முருகன், பேரறிவாளனை தூக்கில் போட வேண்டும்- தங்கபாலு


ராஜீவ் கொலையாளிகள் மூன்று பேருக்கும் வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை நியாயமானது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் காங்கிரஸ் தலைவரும், இந்தியத் நாட்டின் பிரதமருமான தலைவர் ராஜீவ் காந்தி படுகொலை, அதன்வழி நீதிமன்றத் தீர்ப்பினை நிறைவேற்ற 20 ஆண்டுகளாக பல்வேறு நிலைகளில் தடுக்கப்பட்ட நீதி இப்பொழுது செயல் வடிவம் பெறும் போது அதனை தடுப்பதற்கு புதுப்புது அர்த்தங்கள்,

27.8.11

அன்னா ஹஸாரே குழுவில் பிளவு


35KR6IO1_aug16v8
புதுடெல்லி:ஜனலோக்பால் மசோதாவை இன்று மக்களவையில் விவாதிக்க இருக்கும் வேளையில் அன்னா ஹஸாரே குழுவில் பிளவு ஏற்பட்டுள்ளது.
அன்னா ஹஸாரேவின் உடனிருப்பவர்கள் அவரை துஷ்பிரயோகம் செய்வதாக சுட்டிக்காட்டி ஹஸாரே குழுவில் முக்கிய நபரும், கர்நாடாக லோகாயுக்தாவின் முன்னாள் தலைவருமான நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறியுள்ளார்.

ஹஜ்:இந்தியாவுக்கான பங்கு ஒதுக்கீடு(quota) 10 ஆயிரம் அதிகரிப்பு


haj_devil4
புதுடெல்லி:இந்தியாவுக்கான ஹஜ் பங்கு ஒதுக்கீட்டை சவூதி அரேபியா அதிகரித்துள்ளது. 10 ஆயிரம் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இத்துடன் ஹஜ்ஜுக்கான இந்தியாவுக்குரிய ஒதுக்கீடு 1,70,491 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,60,491 இடங்களே ஒதுக்கப்பட்டிருந்தன.
புதிதாக கிடைத்துள்ள ஒதுக்கீட்டு இடங்களை மத்திய ஹஜ் கமிட்டி மாநில ஹஜ் கமிட்டிகளுக்கு பங்கீடுச்செய்யும்.

துபாயில் சட்டவிரோதமாக போராட்டம் நடத்திய இந்தியர்களுக்கு ஜாமீன் மறுப்பு


DPPSMS_thumb2
துபாய்:இந்தியாவில் ஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறி களமிறங்கியிருக்கும் அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் மாகாணமான துபாயில் அதிகாரிகளின் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக பேரணி நடத்திய இந்தியர்கள் எட்டு பேர் கைதுச் செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கான ஜாமீன் மனுவை துபாய் பப்ளிக் ப்ராஸிக்யூசன் நிராகரித்துவிட்டது.

முஸ்லிம்களை கண்காணிக்க நியூயார் போலீஸிற்கு உதவிய சி.ஐ.ஏ


ebm_78004
வாஷிங்டன்:அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லிம்களை கண்காணிக்க நியூயார்க் போலீசுக்கு அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ உதவியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க குடிமகன்களில் ஒரு பகுதியினரை கண்காணிக்க சி.ஐ.ஏ முயன்றதாக அசோசியேட் ப்ரஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.
இச்சம்பவம் சர்ச்சையை கிளப்பியதையடுத்து

அன்னா ஹசாரே - காந்தி தாத்தாவா அல்லது பாசிச தாதாவா


ஜன் லோக்பால் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வரும் அன்னா ஹசாரேவின் போராட்டத்தை வெள்ளையர்களை விரட்ட மகாத்மா காந்தியின் தலைமையில் நடந்த முதல் சுதந்திரப் போருக்கு ஒப்பானதாக ஊடகங்கள் சித்தரிக்கின்றன.

தற்போது இந்தியாவின் தாத்தாவாக, காந்தியின் அவதாரமாக ஊடகங்களால் சித்தரிக்கப்படும் அன்னா ஹசாரேவின் தலைமையில் நடக்கும் போராட்டத்தை இரண்டாம் சுதந்திர போராட்டமாக மீடியா

மூவருக்கு செப். 9ந்தேதி தூக்கு தண்டனை: போராட்டங்கள் தீவிரம்


ராஜிவ் கொலையாளிகள் 3 பேரையும் செப்டம்பர் 9ம் தேதி தூக்கில் இடுவதற்கான உத்தரவு சிறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைதாகி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி குடியரசுத் தலைவர் பிரதிபா

ஜன் லோக்பால் மசோதாவில் பல குறைகள் அத்வானி பல்டி


அன்னா ஹசாரே குழு உருவாக்கியுள்ள ஜன் லோக்பால் மசோதாவில் நிறைய குறைபாடுகள் உள்ளதால் அதை அதே வடிவிலேயே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது கஷ்டம் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி இன்று கூறினார்.
முன்னதாக நேற்று அன்னா ஹசாரேவின் ஜன் லோக்பால் மசோதாவை முழுமையாக

26.8.11

'வெல்வோம் அல்லது மரணமடைவோம்' : கடாபியின் புதிய அறிவிப்பு


வெற்றி பெறுவோம் அல்லது வீர மரணமடைவோம் என லிபிய அதிபர் மௌமர் கடாபி மீண்டும் அறிவித்துள்ளார்.
தலைநகர் திரிபொலியின் பெரும்பாலான பகுதிகளை கடாபி படைகளிடமிருந்து கைப்பற்றியுள்ள கிளர்ச்சிப்படை, கடாபியின் கோட்டை, திரிபொலி விமான நிலையம் என்பவற்றையும் நேற்று தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன.
இந்நிலையில் நேற்றிரவு கடாபி விடுத்த வானொலி அறிவிப்பில்

கத்தாஃபியை விரட்டுவது எண்ணெய்வளத்தை கைப்பற்ற – சாவேஸ்


imagesCA8CS9OB
கராக்கஸ்:வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ் லிபியா அதிபர் கத்தாஃபிக்கு பகிரங்கமாக தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
லிபியாவின் அதிபராக வெனிசுலா கத்தாஃபியை மட்டுமே அங்கீகரிப்பதாக கடந்த புதன்கிழமை சாவேஸ் தெரிவித்தார்.
லிபியாவின் எண்ணெய் வளத்தில் கண்வைத்து அமெரிக்கா தனது நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறது. கத்தாஃபியை

ராம்லீலா மைதானத்துக்குள் சாராய பார்ட்டி?


புதுடெல்லி, ஆக.26 வலுவான லோக்பால் சட்டத்தை வலியுறுத்தி அறப்போராட்டம் நடந்து வரும் ராம்லீலா மைதானத்தில் நேற்றிரவு சுமார் 30 பேர் அநாகரீகமாக நடந்து கொண்டனர். ராம்லீலா மைதானத்தில் தாராளமாக சாப்பாடும் சாராயமும் விநியோகித்தனர்., இதில் மப்பு ஏறிய சிலர் ரகளையில் ஈடுபட்டனர்.

நிருபர்கள் தங்கி இருந்த கூடாரத்துக்குள் நுழைந்த அவர் மோதலில் ஈடுபட்டார்.

கோத்தபயா ராஜபக்சேவை அமெரிக்காவில் வைத்து விசாரிக்க வேண்டும்


தனி நாடு கேட்டார்கள் என்பதற்காக தமிழர்களை இலங்கை அரசு கொல்லவில்லை. மாறாக, தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக இனவெறியுடன் கொத்துக் கொத்தாக தமிழர்களை கொன்றும், பெண்களை மொத்தமாக பாலியல் பலாத்காரம் செய்தும் இனவெறி படுகொலையை நடத்தியுள்ளனர் என்று திருச்சி சிவா எம்.பி இன்று ராஜ்யசபாவில் கடுமையாக சாடினார்.
ராஜ்யசபாவில் இன்று பெரும் இழுபறிக்குப்

விண்வெளி மையத்திற்கு சென்ற ரஷ்ய விண்கலம் வெடித்துச் சிதறியது


சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்ட ரஷ்ய விண்கலம் வெடித்துச் சிதறியது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்து பல நாட்டு விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். விண்வெளி நிலையத்தில் தற்போது 6 விஞ்ஞானிகள் தங்கி உள்ளனர். இவர்களுக்கு தேவையான பொருள்கள் மற்றும்

25.8.11

அன்னா ஹஸாரேவுக்கு எதிராக சமூக ஆர்வலர்கள்


1
புதுடெல்லி:அருந்ததி ராய்,அருணாராய் ஆகியோரைத் தொடர்ந்து ஜனலோக்பால் மசோதாவிற்கான ஹஸாரேவின் போராட்டத்திற்கு ஏராளமான சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஹஸாரேவின் போராட்டத்திற்கு ஆட்களை தேர்வு செய்வது சங்க்பரிவாரம் என்றும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள்தாம் நிதியுதவி அளிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திரைப்பட தயாரிப்பாளர்

ஹஸாரே குழுவினர் டெல்லி இமாமுடன் சந்திப்பு


imagesCAS3WAXG
புதுடெல்லி:அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு கோரி ஹஸாரே குழுவினர் டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் இமாம் ஸய்யத் அஹ்மத் புகாரியை சந்தித்துப் பேசினர்.
ஹஸாரேவின் போராட்டத்தில் முஸ்லிம்களை உட்படுத்தாததற்கு நேற்று முன் தினம் இமாம் வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

அண்ணா ஹசாரேவுக்காக சென்னையில் போங்காட்டம்! வினவின் நேரடி ரிப்போர்ட்!!

ஜன்லோக்பாலை எதிர்க்கறது யாரு? காங்கிரஸ் தானே? சோனியா தானே? அப்ப இது ரோமன் கத்தோலிக் சதி தானே? ரிசர்வேஷன் கொண்டாந்ததிலேர்ந்து எல்லா பிரச்சினைக்கும் காங்கிரஸ் தானே காரணம்? புரிஞ்சுகங்க சார்

ண்ணா ஹசாரேவுக்கு பெருகி வரும் ‘ஆதரவைப்’ பார்த்தால் பயமாக இருக்கிறது. பெயிட் நியூஸ் புகழ் டைம்ஸ் நௌ சேனலில் தொடங்கி என்.டி.டிவியின் தரகு வேலை புகழ் பர்க்கா தத், மாஃபியா உலகத் தொடர்பு

நீதிபதியுடன் பேரம் பேசும் சங்கராச்சாரி: சி.டியால் பரபரப்பு


imagesCAOEOWFB
சென்னை: சங்கர்ராமன் கொலை வழக்கை விசாரித்து வரும் நீதிபதியுடன் ஜெயேந்திரர் தொலைபேசியில் பேசுவது போன்ற ஆடியோ சிடி வெளியாகியுள்ளது.
நீதிபதிக்கு பணம் கொடுத்து வழக்கிலிருந்து தப்பிக்க ஜெயேந்திரர்
முயல்வதாக இந்த சிடி உரையாடல் மூலம் தெரிய வருவதாகவும், இதனால் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில்
மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில்

ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரதமர், சிதம்பரத்திற்கும் பங்குண்டு கனிமொழி


ஸ்பெக்ட்ரம் உரிமத்தை ஏலம் விடுவதில்லை என்று முடிவெடுத்ததில், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரத்திற்கும் பங்குண்டு என்று சி.பி.ஐ., கோர்ட்டில் கனிமொழி கூறினார். இந்த வாதத்தை உறுதிப்படுத்துவதற்காக மன்மோகன் சிங், சிதம்பரம், ராஜா ஆகிய மூன்று பேரும் இதுகுறித்து முடிவெடுத்த ஆலோசனைக் கூட்டத்தின் மினிட் புக்கையும் கனிமொழி கோர்ட்டில் தாக்கல் செய்தார்.
தனக்கு தெரியாமலேயே ராஜா முடிவெடுத்துவிட்டதாக பிரதமர் தொடர்ந்து கூறி வரும் நிலையில், கனிமொழி இவ்வாறு குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல்

24.8.11

ரமலான் உம்ரா:நம்பிக்கையாளர்களின் வெள்ளத்தில் மக்கா


sau-kaaba
மக்கா:பரிசுத்த உம்ராவை ரமலான் மாதத்தில் நிறைவேற்றுவதற்காக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகைத்தந்த நம்பிக்கையாளர்களின் கூட்டத்தால் கஃபாவும், அதன் சுற்றுவட்டாரங்களும் திணறுகின்றன.
சாதாரணமாக ரமலானின் இறுதி பத்து தினங்களில்தான் பெரும் மக்கள் வெள்ளம் காணப்படும். ஆனால், இவ்வாண்டு ரமலானின் முதல் பத்து தினங்களிலேயே

அன்னா ஹஸாரே போராட்டத்தில் முஸ்லீம்கள் பங்கேற்க வேண்டாம்- டெல்லி ஜும்மா மசூதி இமாம்


டெல்லியில் அன்னா ஹஸாரே நடத்தி வரும் போராட்டத்தில் முஸ்லீம்கள் பங்கேற்காமல் விலகியிருக்க வேண்டும் என்று டெல்லி ஜும்மா மசூதி இமாம் சையத் அகமது புகாரி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ராம்லீலா மைதானத்தில் நடந்து வரும் போராட்டத்தில் வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய் ஆகிய கோஷங்கள் நிரந்தரமாகி விட்டன. இவை இஸ்லாமுக்கு எதிரானவையாகும்.

நாட்டையோ அல்லது மண்ணையோ

ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம்


26IN_ROY_275742e
ஹைதராபாத்:அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு எதிராக பிரபல மனித உரிமை ஆர்வலரும், எழுத்தாளருமான அருந்ததிராய் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார். ஹஸாரேவின் வழிகள் காந்திய வழியாக இருக்கலாம். ஆனால் அவரது கோரிக்கைகள் ஒருபோதும் காந்தியக் கொள்கை அல்ல என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஹஸாரே மதசார்பற்றவராக இருந்தால் முஸ்லிம்கள் ஏன் அவருடைய குழுவில் இடம்பெறவில்லை – டெல்லி இமாம் கேள்வி


imagesCAAS0WVU
புதுடெல்லி:அன்னா ஹஸாரே மதசார்பற்றவராக இருந்தால் முஸ்லிம்களை ஏன் அவருடைய குழுவில் இடம்பெற செய்யவில்லை என டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் இமாம் செய்யத் அஹ்மத் புகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
மதவாதம்தான் ஊழலை விட தேசத்திற்கு அச்சுறுத்தலானது. மதவாதத்தை குறித்து ஹஸாரே வாயை திறப்பதில்லை. ஹஸாரே அவரின் பின்னணியில் செயல்படும் அரசியல் சக்தியிடமிருந்து விடுபடவேண்டும்.

வல்லரசு ஆகப்போகும் ஓ இந்தியாவே இது உணக்கே நியாயமா !!


என்கவுண்டர் கொலைகளை நிகழ்த்தும் அதிகாரிகளுக்கு மரணத் தண்டனையை விதிக்கவேண்டும் என அண்மையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறியிருந்தது.

பாலியல் வன்புணர்வு கொலையை விட கொடிய குற்றம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. கொலை ஒரு மனிதனை ஒருமுறை மட்டுமே கொலைச் செய்யும், ஆனால் பாலியல் வன்புணர்வு பாதிக்கப்பட்டவரை பல

23.8.11

திரிபோலி எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டில்


16054352
திரிபோலி:லிபியாவின் அதிபர் முஅம்மர் கத்தாஃபியிடம் மீதமிருந்த நகரமான திரிபோலி கிட்டத்தட்ட எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டில் பூரணமாக வந்ததையடுத்து 42 வருடகால கத்தாஃபியின் ஆட்சி முடிவு வந்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி நிலையத்தை எதிர்ப்பாளர்கள் கைப்பற்றியுள்ளனர். எதிர்ப்பாளர்கள் கவுன்சிலை லிபியாவின் அதிகாரப்பூர்வ

இந்திய ஜன நாயகத்துக்கு எதிரானவை கயவர்களின் நாடகம்! அருணா ராய்


தகவல் உரிமைச் சட்டத்தையும், வேலை உறுதி திட்டத்தையும் நாட்டிற்கு அளித்த அருணாராயின் தலைமையிலான பொது சமூக பிரதிநிதிகள் அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அளித்தபிறகு அன்னா ஹஸாரே உண்ணாவிரதம் மேற்கொண்டிருப்பது ஆபத்தானதும், ஜனநாயகத்திற்கு

120 ஹமாஸ் போராளிகள் கைது-இஸ்ரேலின் அடாவடி


1745780
காஸ்ஸா:காஸ்ஸா முனையில் இஸ்ரேல் ராணுவத்தின் அக்கிரமத் தாக்குதல் ஐந்தாவது தொடர்ந்த வேளையில் நேற்று 120 ஹமாஸ் போராளிகளை இஸ்ரேல் ராணுவம் கைதுச் செய்துள்ளது.
தெற்கு மேற்கு கரையிலிருந்து இவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளதாக ஃபலஸ்தீன் போலீஸ் அறிவித்துள்ளது. கைதுச் செய்யப்பட்டவர்களில் ஹமாஸின் எம்.பி முஹம்மது முத்தலக் அபூஜெய்ஷாவும் உட்படுவார்.