தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.8.11

குஜராத்:மோடி அரசை மீறி ஆளுநர் லோகாயுக்தாவை நியமித்தார்


gujaratgov-modi-295
காந்திநகர்:மோடி அரசை மீறி குஜராத் மாநில ஆளுநர் லோகாயுக்தாவை எதிர்பாராதவிதமாக நியமித்துள்ளார்.
முந்தைய வழக்கங்களை மீறி ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.எ.மேத்தாவை ஆளுநர் தலைவராக தேர்வுச் செய்துள்ளார். முன்னர் ஆர்.எ.மேத்தாவை லோகாயுக்தவாக உயர்நீதிமன்றம் அரசுக்கு சிபாரிசுச் செய்திருந்தது. ஆனால்,இதுவரை அரசு நடவடிக்கை மேற்கொள்ளாததைத்
தொடர்ந்து ஆளுநர் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
எதிர்கட்சி தலைவர் சக்தி சிங் கோஹில் தலைமையிலான காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் ஆளுநரை சந்தித்து லோகாயுக்தா தொடர்பாக விவாதித்தனர். தொடர்ந்து ஆளுநர் சட்டநிபுணர்களுடன் கலந்தாலோசித்து லோகாயுக்தாவை நியமித்துள்ளார்.
அரசின் நடவடிக்கைகளை கண்காணிக்க கடந்த ஏழு வருடங்களாக எவ்வித அமைப்பும் மாநிலத்தில் இருக்கவில்லை. அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தரும் மோடி லோகாயுக்தாவை நியமிக்காதது கவுரதரமானது என எதிர்கட்சி தலைவர் சக்தி சிங் கூறுகிறார். ஆளுநரின் நடவடிக்கையை பா.ஜ.க ஒரு தலைபட்சமானது என பா.ஜ.க பதில் அளித்துள்ளது.

0 கருத்துகள்: