தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.8.11

பிராணிகள் வளர்க்க துவங்கிய காலத்தை மாற்றிய சவுதி அகழ்வாராய்ச்சி


சவுதி அரேபியாவில் சுமார் 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு குதிரைகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அகழ்வாராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
சவுதி அரேபியாவில் சில பகுதிகளில் நடத்திய சோதனையில் புதிய அகழ்வாராய்ச்சி தலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்கு நடத்திய ஆராய்ச்சியில் அல்-மாகர் என்ற
வளர்ந்த நாகரிகத்தை காண முடிகிறது. மத்திய ஆசியா பகுதிகளில் சுமார் 5,500 ஆண்டுகளாக தான் மிருகங்களை மனிதர்கள் பயன்படுத்தி வருகின்றனர் என கருத்து நிழவி வந்தது.
இந்நிலையில் அல்-மாகர் நாகரிக பகுதிகளில் உள்ள சிலரது வீடுகளும் அங்கு வளர்க்கப்பட்ட குதிரைகளின் எலும்புகளும் கிடைத்துள்ளன. ஆராய்ச்சியாளர்கள் சிலர் கூறுகையில், இங்கு கிடைத்துள்ள தடயங்களின் மூலம் நாகரிகங்களை பற்றிய புதிய தகவல் கிடைத்துள்ளன.
நியோதிலிக் கால வாழ்க்கையை குறித்த நமது சிந்தனையை இந்த ஆராய்ச்சி மாற்றி உள்ளது. இந்த பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட புதைக்கப்பட்ட மம்மி உடல்கள், அம்புகள், ஆயுதங்கள், நூற்பு மற்றும் தைக்கும் அமைப்புகள், அரைப்பு கற்கள் என பல கிடைத்துள்ளன. நாகரிகம் மிகுந்த கைத்தறி பணிகள் நடந்ததற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
எண்ணெய் வளமிகுந்த நாடு என்பதை விட, சிறந்த சுற்றுலா தலங்களை கொண்ட நாடாக விளங்க சவுதி அரேபியா அரசு முயன்று வரும் நிலையில், அகழ்வாராயாளர்களின் இந்த புதிய கண்டுபிடிப்பு, அந்நாட்டு அரசை உற்சாகப்படுத்தியுள்ளது.

0 கருத்துகள்: