தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.6.11

இலங்கை போர்க்குற்றம் குறித்து ஐ.நா. விசாரணை: டேவிட் கேமரூன்


இலங்கையில் நடந்த போர்க்குற்ற செயல்கள் குறித்து ஐ.நா. விசாரணை நடத்த வேண்டும் என இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் வலியுறுத்தி உள்ளார்.
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் நடந்த இறுதிகட்ட போரில் தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. அது தொடர்பாக விசாரணை

டிராபிக் ராமசாமிக்கு உயர் நீதிமன்றம் ரூ.10 ஆயிரம் அபராதம்

சென்னை, ஜூன். 17-  லோக்பால் மசோதா தொடர்பாக தொடர்ந்த வழக்கில் டிராபிக் ராமசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது.
 
சமூக சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடர்ந்தார். அதில், ஊழல் ஒழிப்புக்கான லோக்பால் சட்ட மசோதா வரவு கமிட்டியில் தென் மாநிலத்திற்கு பிரதி நிதித்துவம் வழங்க வேண்டும் என்று நான் மத்திய அரசுக்கு மனு கொடுத்திருந்தேன். அம்மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 
 
இந்த மனுவை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால்,

பின்லேடனைப் போல ஜவாஹிரியையும் சுட்டுக் கொல்வோம்: அமெரிக்கா

வாசிங்டன், ஜூன். 18-  ஒசாமா பின்லேடனை வேட்டையாடியதைப் போல அல் கொய்தாவின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டிருக்கும் அல் ஜவாஹிரியையும் சுட்டு வீழ்த்துவோம் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் எச்சரித்துள்ளார்.

அல் கொய்தா அமைப்பின் தலைவராக இருந்து வந்த பின்லேடனை பாகிஸ்தானின் அபோதாபாத்தில் உள்ள வீட்டில் வைத்து அமெரிக்க வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இதையடுத்து அல் கொய்தாவின் புதிய தலைவராக அதன் நம்பர் டூ தலைவராக இருந்து வந்த ஜவாஹிரி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈழப்படுகொலை செய்திகளை இருட்டடிப்பு செய்யும் ஊடகங்கள்!


சனல் 4 தொலைக்காட்சி அம்பலப்படுத்திய சிறீலங்கா கொலைக்களம் என்ற ஒரு மணி நேர ஒளிநாடா உலகளவில் பாரிய ஊமைக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான செய்திகளை பொதுவாக தமிழகத்தின் பத்திரிகைகளும், இணையங்களும் கூடுதல் முக்கியம் கொடுத்து எழுதுவது வழமை. ஆனால் சனல் 4 வெளியான பின்னர் அனைவரும் அடக்கி வாசிப்பதை காணமுடிகிறது.

உண்மை துல்லியமாக வெளிப்படும் நேரம் எதற்காக மௌனம் காக்க வேண்டும் என்ற கேள்வி பல்வேறு உப கேள்விகளை உருவாக்குகிறது.

பெண்களுக்கு எதிரா வன்முறை இந்தியாவுக்கு 4 இடம்!


புதுடில்லி:பெண்களுக்கு எதிரான வன்முறைகளில், இந்தியா உலகளவில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. உலகில் பெண்கள் வாழ்வதற்கு ஆபத்தான நாடுகள் எவை என சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில், சுகாதாரப் பிரச்னை, பாலியல் வன்முறை, பாலியல் அல்லாத வன்முறைகள், பண்பாடு, மதம் மற்றும் பாரம்பரியத்தின் பேரால் தீங்கு விளைவிக்கும் சடங்குகள், பொருளாதார வளம் சரியாகக் கிடைக்காதது, ஆள் கடத்தல் போன்ற பெண்களுக்கு எதிரான ஆறு

பங்களாதேஷின் 'ராபின் ஹூட்' திருடர் பிடிபட்டார்!


பங்களாதேஷின் 'ராபின் ஹூட்' ஹீரோ என மக்களால் போற்றப்பட்டு வந்த நூதன திருடர், காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
செல்வந்தர்களிடமிருந்து கொள்ளையிட்டு, ஏழை வறியவர்களுக்கு வாரி வழங்கிய, இங்கிலாந்தின் சரித்திர நாயகன் ராபின் ஹூட். இவருடைய பாணியை பின்பற்றி பாதியுல் ஹக் நாசீர் எனும் நபர், கொள்ளை சம்பவங்களை மேற்கொண்டு வந்தார். எனினும் தான் கொள்ளையடிக்கும் பணத்தை ஏழை, எளியவர்களுக்கே கொடுத்து வந்தார்.


45 வயதான இவர், கடந்த இரண்டு தசாப்த காலமாக பல ஆயிரக்கணக்கான அமெரிக்க டாலர்கள் சொத்துக்களை கொள்ளையுட்டு, இல்லாதோருக்கு வழங்கினார். மக்களிடம் இவருக்கு இருக்கும் செல்வாக்கு காரணமகவும், தனது அதிநுட்ப கொள்ளையடிக்கும் திறனினாலும் காவற்துறையினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிவந்தார்.


எனினும் தமக்கு வழங்கிய பணம்,  நாசீர் கொள்ளையடித்து சம்பாதித்தது தான் என, அனாதை ஆசிரமங்களும் பள்ளிவாசல்களும் அறிந்திருக்கவில்லை.
எவ்வளது அதிகமாக பாதுகாப்பு போடப்பட்ட இடத்திலும், மிகவும் நுட்பமான முறையில் கொள்ளையடித்துவிடும் அபார ஆற்றலை கொண்டிருந்த நாசீர், இக்கொள்ளைகளுக்காக, யாரையும் தாக்கியதோ, கொலை செய்ததோ இல்லை.


யாருக்கும் எந்த சேதமும் இல்லாமல் பணத்தை மட்டும் திருடுவதில் கில்லாடியாம் இவர்.  எனினும் விதி இப்படியானவர்களை விட்டுவைக்காது என்பதற்கிணங்க சிட்டாங் நகரின் கடையொன்றில் கொள்ளையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது பாதுகாப்பு கமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் அவர் பிடிபட்டுள்ளார். இது இவர் வாழ்ந்த கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.