தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.6.11

பங்களாதேஷின் 'ராபின் ஹூட்' திருடர் பிடிபட்டார்!


பங்களாதேஷின் 'ராபின் ஹூட்' ஹீரோ என மக்களால் போற்றப்பட்டு வந்த நூதன திருடர், காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
செல்வந்தர்களிடமிருந்து கொள்ளையிட்டு, ஏழை வறியவர்களுக்கு வாரி வழங்கிய, இங்கிலாந்தின் சரித்திர நாயகன் ராபின் ஹூட். இவருடைய பாணியை பின்பற்றி பாதியுல் ஹக் நாசீர் எனும் நபர், கொள்ளை சம்பவங்களை மேற்கொண்டு வந்தார். எனினும் தான் கொள்ளையடிக்கும் பணத்தை ஏழை, எளியவர்களுக்கே கொடுத்து வந்தார்.


45 வயதான இவர், கடந்த இரண்டு தசாப்த காலமாக பல ஆயிரக்கணக்கான அமெரிக்க டாலர்கள் சொத்துக்களை கொள்ளையுட்டு, இல்லாதோருக்கு வழங்கினார். மக்களிடம் இவருக்கு இருக்கும் செல்வாக்கு காரணமகவும், தனது அதிநுட்ப கொள்ளையடிக்கும் திறனினாலும் காவற்துறையினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிவந்தார்.


எனினும் தமக்கு வழங்கிய பணம்,  நாசீர் கொள்ளையடித்து சம்பாதித்தது தான் என, அனாதை ஆசிரமங்களும் பள்ளிவாசல்களும் அறிந்திருக்கவில்லை.
எவ்வளது அதிகமாக பாதுகாப்பு போடப்பட்ட இடத்திலும், மிகவும் நுட்பமான முறையில் கொள்ளையடித்துவிடும் அபார ஆற்றலை கொண்டிருந்த நாசீர், இக்கொள்ளைகளுக்காக, யாரையும் தாக்கியதோ, கொலை செய்ததோ இல்லை.


யாருக்கும் எந்த சேதமும் இல்லாமல் பணத்தை மட்டும் திருடுவதில் கில்லாடியாம் இவர்.  எனினும் விதி இப்படியானவர்களை விட்டுவைக்காது என்பதற்கிணங்க சிட்டாங் நகரின் கடையொன்றில் கொள்ளையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது பாதுகாப்பு கமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் அவர் பிடிபட்டுள்ளார். இது இவர் வாழ்ந்த கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்துகள்: