தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.9.11

முஸ்லிம்களுக்கு மத்திய அரசு இட ஒதுக்கீடு: மத்திய சட்ட மந்திரி தகவல்


முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்காக மாதிரி திட்டம் வகுக்கப்படும் என்று, மத்திய சட்ட மந்திரி சல்மான் குர்சித் கூறியுள்ளார்.
மத்திய சட்ட மந்திரி சல்மான் குர்சித் ஐதராபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஆந்திர அரசு பாணியில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீட்டுக்காக மாதிரி திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர் மன்மோகன்சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் எனது அமைச்சகத்தை கேட்டுக் கொண்டுள்ளனர்.

பாரத்புர்:குஜ்ஜார்களுடன் இணைந்து முஸ்லிம்களை நரவேட்டையாடிய காவல்துறை


9
புதுடெல்லி:ராஜஸ்தான் பாரத்புரில் உள்ள கோபால்கர் என்ற இடத்தில் முஸ்லிம்களுக்கும் குஜ்ஜார்களுக்கும் இடையில் கலவரம் நடந்து இரண்டு நாட்கள் ஆகியும் பதற்றம் நிலவுகிறது. அந்த பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள் காவல்துறையையோ அல்லது மற்ற அரசு துறைகளையோ நம்ப முடியாமல் பீதியில் உள்ளனர்.
முஸ்லிம்களுக்கும்

கூகுள் இணையதங்களை பாகிஸ்தானில் தடை செய்வோம்: ரகுமான் மாலிக்

கராச்சி, செப். 20  தீவிரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கூகுள் மற்றும் யூடியூப் இணையதளங்களை பாகிஸ்தானில் தடை செய்வோம் என்று உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் அவ்வப்போது சில கருத்துகளை சொல்லி சர்ச்சையில் சிக்கி வருகிறார்

குஜராத்தில் உள்ள 5 கோடி மக்களுக்கு நீதி செலுத்த முடியாதவர் எவ்வாறு இந்திய நாட்டில் உள்ள 125 கோடி மக்களுக்கு நீதி செலுத்துவார்


மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி 3 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த நரேந்திர மோடியின் செயல்பாட்டை பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கடுமையாக விமர்சித்து உள்ளது.
நரேந்திர மோடியின் உண்ணாவிரதம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய ஜனதா தள தேசிய செய்தித் தொடர்பாளர் சிவானந்த் திவாரி, ''குஜராத் முதல்வர் நரேந்திர மோடி

அமெரிக்க சொர்க்கத்தில் ஆறில் ஒருவர் ஏழை!

தற்போது சோமாலியாவில் பட்டினிச்சாவை எதிர்நோக்கி இருக்கம் மக்களுக்காக மேற்குலக ஊடகங்கள் மக்களிடம் காணிக்கை போடுமாறு கேட்டு வருகின்றன. இனி அந்த கோரிக்கை அமெரிக்க மக்களுக்காகவும் இருக்குமோ?
ஹாலிவுட் படங்களில் டெக்னாலாஜியை வைத்து மிரட்டுவதாக இருக்கட்டும், பின்லேடனை பறந்து போய் கொன்ற ஆக்சன் த்ரில்லராக இருக்கட்டும், மென்பொருள் துறையில் ஆதிக்கம் செய்வதாக இருக்கட்டும், உலகெங்கும் கடன் வாங்கி தின்று தீர்ப்பதாக இருக்கட்டும்…. எல்லாவற்றிலும் விண்ணைத் தொடும் அமெரிக்காவில்தான் ஏழைகள் அதிகமாம்!

யேமன் அதிபருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் : துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் பலி?


யேமன் அதிபர் அலி அப்துல்லா சாலா பதவி விலக கோரியே நேற்று இந்த மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது. இராணுவத்தினரின் துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் மூலம் ஆர்ப்பாட்டம் கலைக்கப்பட்ட போதும் அதிபர் பதவி விலகும் வரை தமது போராட்டம் தொடரும் என கிளர்ச்சி குழுவினர் தெரிவித்துள்ளனர்.பாதுகாப்பு படையினர் மீது ஆர்ப்பாட்ட