தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.12.11

கைப்பற்றப்பட்ட அமெரிக்க ஆளில்லா விமானத்தை திருப்பி கொடுக்க முடியாது : ஈரான்

ஈரான் படையினரால் கைப்பற்றப்பட்ட அமெரிக்க ஆளில்லா விமானத்தை அமெரிக்காவுக்கு திருப்பி கொடுக்க முடியாது என ஈரான் புரட்சிப்படையின் மூத் த காவற்துறை அதிகாரி ஜெனரல் ஹொஸெய்ன் ஸ லாமி தெரிவித்துள்ளார்.ஆப்கான்ஸ்தான் எல்லை பகு தியிலிருந்து 250 கி.மீ தொலைவில் காஷ்மாரில் குறித் த அமெரிக்க ஆளில்லா விமானம் கைப்பற்றப்பட்டது. RQ-

பொருமைக்கும் எல்லை உண்டு தினமல(ம்)ருக்கு எச்சரிக்கை


முஸ்லிம்களின் மனதை புண்படுத்தி செய்திகள் வெளியிடுவதில் தமிழ் நாளிதழ்களில் தினமலரை "நம்பர் 1" என்று கூறலாம் அந்தளவிற்கு தொடர்ந்து முஸ்லிம்களின் மனதை புண்படுத்தி வருகிறது. முஸ்லிம்கள் தங்களது உயிரை விட புண்ணியமாக மதிக்கும் இறைதூதரான முஹம்மது (ஸல்) அவர்களின் பெயரில் கார்டூனை சில வருடங்களுக்கு முன்பாக வெளியிட்டது. இது முஸ்லிம் சமூகம் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எத்துனையோ அமைப்புகள் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தியும்இதுவரை தினமலர் கார்டூனை

ஸ்வீடனில் ஹிஜாப் அணிந்த முதல் பெண் போலிஸ் அதிகாரி


ஸ்டாக்ஹோம்:டோன்னா எல்ஜம்மால் என்கிற 26  வயது பெண்மணியே ஸ்வீடனில் ஹிஜாப் அணிந்து பணி புரியும் முதல் பெண் காவலதிகாரி என்று மெட்ரோ சே என்னும் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. அவர் ஹிஜாப் அணிவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே காவல்துறையில் தாம் இணைய விருப்பப்பட்டார் என்றும்அப்பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

முல்லை பெரியாறு அணை விவகாரம் : டிசம்பர் 15, தமிழக சட்டசபையில் சிறப்பு கூட்டத்தொடர்

முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பில் எதிர்வரும் டிசம்பர் 15ம் திகதி, தமிழக சட்டசபையில் சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறவிருக் கிற து. முல்லை பெரியாறு பிரச்சினை தொடர்பில் தமிழக மற்றும் கேரளா ஆகி ய இரு மாநிலங்களுக்கு இடையி ல் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன. சுமார் 40,000 கேரள

ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு:வசுந்தரா ராஜே மீது நடவடிக்கை எடுக்க விடுதலையான முஸ்லிம்கள் கோரிக்கை


ஜெய்ப்பூர்:2008-ஆம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த குண்டுவெடிப்பில் அநியாயமாக கைது செய்யப்பட்டு விடுதலைச் செய்யப்பட்ட பதினொன்று முஸ்லிம்கள் தங்கள் மீது வழக்கை ஜோடித்த ராஜஸ்தான் மாநில முன்னாள் பா.ஜ.க முதல்வர் வசுந்தரா ராஜே உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

போலி தீவிரவாத வழக்குகள்:போலீஸ் அதிகாரிகளை தண்டிக்க சட்டம் – மத்திய அரசு பரிசீலனை


புதுடெல்லி:தீவிரவாத வழக்குகளில் அநியாயமாக குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும், அதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனையும் உறுதிச்செய்யும் முழுமையான சட்டம் இயற்றுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு போன்ற வழக்குகளில் அப்பாவிகள் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்ட

மெக் டொனால்டு நிறுவனத்துக்கு ரூ.9.18 கோடி அபராதம்


மெக் டொனால்டு நிறுவனத்தின் “ஹேப்பி மீல்” உணவு பொருள்கள் குழந்தைகளின் உடல்நலனை கெடுக்கும் வகையில் இருப்பதாக கூறி அந்நிறுவனத்துக்கு பிரேசில் நீதிமன்றம் ரூ.9.18 கோடி(இந்திய ரூபாய்) அபராதம் விதித்துள்ளது.உலகம் முழுவதும் கிளைகள் வைத்து உணவு பொருள் விற்பனை செய்து வரும் நிறுவனம் மெக் டொனால்டு. அமெரிக்காவில் 60 ஆண்டு பாரம்பரியம் வாய்ந்த