தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.2.11

பஹ்ரைன்: போராட்டங்கள் வலுக்கின்றன


கொல்லப்பட்டவரின் இறுதி ஊர்வலத்தில் ஆர்ப்பாட்டம்
பொலிசாரால் கொல்லப்பட்டவரின் இறுதி ஊர்வலத்தில நடந்த ஆர்ப்பாட்டம்

பஹ்ரைனில் தொடர்ந்து அரசியல் கொந்தளிப்பு நிலவி வரும் நிலையில் ஆர்பாட்டக்காரகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் ஷியா முஸ்லிம்கள் இருவர் பலியாகியுள்ளனர்.
இணையதளங்கள், ஃபேஸ்புக் போன்ற சமூக தொடர்பு ஊடகங்களை பயன்படுத்தி போராட்டக்காரர்கள் தலைநகர் மனாமாவிலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் மக்களை வீதிகளில் இறங்கி போராடுமாறு போராட்டக்காரர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.
பஹ்ரைன் சுன்னி இனத்தவர்களான அல் கலீஃபா குடும்பத்தினரால் ஆட்சி செய்யப்படுகிறது. மன்னர் ஹமாத் அரசராக இருக்கிறார்.
அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வரும் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க, சிறு ஈயக் குண்டுகள் மற்றும் ரப்பர் தோட்டக்களை கொண்டு சுட்டும், கண்ணீர்புகை குண்டுகளையும் வீசியும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு போராட்டாக்காரர் கொல்லப்பட்டார்.
அவரது இறுதி நிகழ்வுகளின் போது காவல்துறையினர் சுட்டதில் மேலும் ஒரு இளைஞர் கொல்லப்பட்டதாக எதிர்கட்சியினர் கூறுகிறார்கள்.
பஹ்ரையினில் இடம்பெற்றுள்ள இந்தப் போராட்டங்களுக்கும், துனீஷியா மற்றும் எகிப்தில் இடம்பெற்ற போராட்டங்களுக்கும் பொதுவான சில இழைகள் உள்ளன.
குறிப்பாக ஜனநாயக வழிமுறைகளுக்கு வாய்ப்புகள் இல்லாதிருத்தல், ஏழ்மை போன்றவை இந்தப் போராட்டங்கள் எல்லாவற்றுக்குமே பொதுவான காரணமாக இருந்துள்ளன

வளர்ந்துவரும் வலதுசாரி தீவிரவாதம் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் - ஜி.கே.பிள்ளை

புதுடெல்லி,பிப்.15:வளர்ந்துவரும் வலதுசாரி தீவிரவாதம் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என மத்திய உள்துறைச் செயலாளர் ஜி.கே.பிள்ளை தெரிவித்துள்ளார்.

நிரபராதிகளான இளைஞர்களை பொய்வழக்கில் சிக்கவைக்கும் போலீஸ் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்முகத்தில் அவர் இதனை தெரிவித்தார்.
மலேகான், அஜ்மீர், மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ஆகிய குண்டுவெடிப்புகளில் சங்க்பரிவாரின் பங்கு வெட்ட வெளிச்சமான சூழலில்தான் ஜி.கே.பிள்ளையின் பேட்டி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.