தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.3.11

யுஏஇ-யில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதற்காண அடையாள அட்டை வழங்கும் பணி துவக்கம்

துபை,மார்ச்.2:வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதற்கு அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் பணி துவங்கி உள்ளது.இதன் ஒரு கட்டமாக அமீரகத்தில் வாழும் இந்திய மக்கள் அங்குள்ள தூதரக இணையதளத்தில் விண்ணபித்து கொள்ள வேண்டும். அதில் அவர்களது விசா எண், முடிவடையும் காலம், பாஸ்போர்ட் எண் மற்றும் முடிவடையும் தேதி, முகவரி, செல்பேசி எண், இந்திய முகவரி போன்ற சில தகவல்கள் கொடுக்க வேண்டும். பின்னர் மின்னஞ்சலுக்கு மற்ற விவரங்கள் வரும். அடையாள அட்டை இந்திய முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இதுவரை இதில் பதிவு செய்யாதவர்கள் உடனே இதை பயன்படுத்தி கொள்ளவும்.

http://uaeindians.org/registration.aspx

முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்திற்கு தடைவிதிக்க வேண்டும் -இஸ்ரேல்

ப்ரஸ்ஸல்ஸ்,மார்ச்.2:முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை தடைச்செய்ய வேண்டுமென இஸ்ரேல் எகிப்தின் ராணுவ ஆட்சியாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் தீவிரவாத குழுவாகும். தேர்தலில் போட்டியிட முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது. இவ்வாறு இஸ்ரேலிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் டேனி அயனேண் வலியுறுத்தியுள்ளார்.

செய்தி:மாத்யமம்

சுனில் ஜோஷி கொலை: குற்றப்பத்திரிகை தாக்கல்


தேவாஸ்(மத்தியபிரதேசம்),மார்ச்.2:ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷியை கொலை செய்த வழக்கில் பிரக்யாசிங் தாக்கூர் உள்பட 7பேர் மீது குற்றப்பத்திரிகையை தேவாஸ் போலீஸ் தாக்கல் செய்துள்ளது.


கடந்த 2007-ஆம் ஆண்டு ஜோஷி கொலை செய்யப்பட்டார். இக்கொலைத் தொடர்பாக சம்ஜோதா எக்ஸ்பிரஸ்

லிபியாவை நோக்கி நகரும் அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்!!

அமெரிக்கா பிப்,2: தரை மற்றும் கடல் வழியாக லிபியாவைச் சுற்றிலும் அமெரிக்கப் படைகளை நிறுத்த அந்நாடு தீர்மானித்துள்ளது. லிபியாவின் உள்நாட்டு நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது அதன் நோக்கம் என்று கூறப்படுகின்றது. ஆயினும் கடாபியை ஆட்சியிலிருந்து அகற்றும் நோக்குடன் இராணுவத் தலையீட்டை மேற்கொள்ளவே அமெரிக்கப் படைகள் அங்கு அனுப்பப்பட்டுள்ளதாக சர்வதேச அவதானிகள் தெரிவிக்கின்றனர். செங்கடல் அருகே அமெரிக்காவின்

திரிபோலியில் கடுமையான போராட்டம்

திரிபோலி,மார்ச்.2:எதிர்ப்பாளர்களின் வசமிருக்கும் திரிபோலியில் சில பகுதிகளை மீட்பதற்காக கத்தாஃபியின் ராணுவம் முயற்சி மேற்கொண்டதால் அங்கு கடுமையான போராட்டம் நடந்துவருகிறது.

அஸ்ஸாவியாவில் நேற்று முன்தினம் எதிர்ப்பாளர்களும், ராணுவமும் 6 மணிநேரம் மோதலில் ஈடுபட்டனர். கிழக்கு மற்றும் மேற்கு நகரங்களின் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.