தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.1.11

துனீசியா, லெபனான் விவகாரத்தில் தலையிடாதீர்கள் - மேற்கத்திய நாடுகளுக்கு அஹ்மத் நிஜாத் எச்சரிக்கை

தெஹ்ரான்,ஜன:ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத் அமெரிக்கா, இஸ்ரேல், சில மேற்கத்திய நாடுகள் ஆகியன துனீசியா மற்றும் லெபனானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மனோரீதியிலான போர்மூலம் துனீசியா மக்களின் உரிமைகளை பறிக்க மேற்கத்திய நாடுகள் திட்டமிட்டுள்ளதாக அஹ்மத் நிஜாத் குறிப்பிட்டார்.

புதன்கிழமை அன்று மத்திய ஈரான் நகரமான யஸ்தில் நடந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசினார் அவர்.

துனீசியாவில் 26 வயது காய்கறி வியாபாரியான இளைஞர் ஒருவரின் தற்கொலை மூலம் உருவான மக்கள் புரட்சி அந்நாட்டு அதிபரை நாட்டை விட்டு ஓடவைத்தது. தொடர்ந்து அங்கு போராட்டங்கள் நடந்துவருகின்றன.

அஹ்மத் நிஜாத் இதனைக் குறித்து தெரிவிக்கையில், துனீசிய அரசியல் தலைவர்கள் வெளிநாட்டு தலையீடுக் குறித்து மிகுந்த கவனமாக இருக்கவேண்டும். மக்களின் தேவை மற்றும் விருப்பத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். துனீசிய மக்கள் ஒரு இஸ்லாமிய அரசைத்தான் விரும்புகிறார்கள்.

அஹ்மத் நிஜாத் தனது உரையில் லெபனான் முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரீரியின் கொலை வழக்கை விசாரிக்கும் ஐ.நா தீர்ப்பாயத்தை கடுமையாக விமர்சித்தார்.

அமெரிக்கா மற்றும் அதன் மேற்கத்திய கூட்டாளி நாடுகள் லெபனானின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதை நிறுத்தவேண்டும். இது மிகவும் மோசமான சூழ்நிலை என அவர் குறிப்பிட்டார்.
ஈரான் கடந்த 32 வருடங்களில் பெற்ற வெற்றிகளை குறிப்பிட்ட நிஜாத், ஈரான் தற்பொழுது உலக நாடுகளிடையே ஒளிவீசிக் கொண்டிருக்கிறது. அதன் எதிரிகள் மண்டியிடுகின்றனர் என குறிப்பிட்டார்இந்த இடுகை(post)தங்களை கவர்ந்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி

ஃபலஸ்தீன் சுதந்திர நாட்டிற்கு ரஷ்யா ஆதரவு


மாஸ்கோ,ஜன.20:ஃபலஸ்தீன் சுதந்திர நாட்டிற்கு ரஷ்ய அதிபர் திமித்ரி மெத்வதேவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.


முன்னாள் சோவியத் யூனியன் கடந்த 1988 ஆம் ஆண்டே ஃபலஸ்தீன் நாட்டை அங்கீகரித்துள்ளது எனவும் அந்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனவும் மெத்வதேவ் பிரகடனப்படுத்தியுள்ளார்.


ரஷ்ய அதிபர் என்ற நிலையில் மெத்வதேவ் முதன் முதலாக ஃபலஸ்தீன் சென்றுள்ளார். அவ்வேளையில்தான் இதனை அறிவித்தார் அவர்.
ரஷ்யாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமுமில்லை. கிழக்கு ஜெருசலத்தை தலைநகராகக் கொண்ட சுதந்திர ஃபலஸ்தீனுக்கு ஏற்கனவே நாங்கள் ஆதரவு வழங்கியுள்ளோம்.எதிர்காலத்திலும் அது தொடரும் என மெத்வதேவ் தெரிவித்தார்.

பிரேசில்,அர்ஜெண்டினா உள்பட பல நாடுகளும் கடந்த இரண்டு மாதங்களிடையே ஃபலஸ்தீன் சுதந்திர நாட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இஸ்ரேலுடனான சமாதான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ள சூழலில் தங்களின் நாட்டிற்கு ஐ.நாவின் அங்கீகாரத்தை பெறுவதற்காக ஃபலஸ்தீன் ஆலோசித்து வருகிறது.

ஐரோப்பிய நாடான நார்வேயும் ஃபலஸ்தீனை அங்கீகரித்துள்ளது. 1988 ஆம் ஆண்டில் ஃபலஸ்தீனை அங்கீகரித்த ஒரே நாடு சோவியத் ரஷ்யா என மெத்வதேவிற்கு பதில் அளித்த ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்  நன்றி: பாலைவன தூது
இந்த இடுகை(post)தங்களை கவர்ந்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி

திருவாரூர் அருகே கம்யூ. பிரமுகர் வெட்டிக்கொலை; கடை-வீடுகளுக்கு தீவைப்பு; பஸ்கள் ஓடவில்லை

திருவாரூர், ஜன. 20-
திருவாரூர் அருகே கம்யூனிஸ்டு பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.   திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியைச் சேர்ந்தவர் நாவலன். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளராக இருந்து வந்தார். நேற்று நாகையில் நடை பெற்ற கட்சி கூட்டத்தில் நாவலன் கலந்து கொண்டார். இரவு 7.30 மணிக்கு பேரளத்துக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டு இருந்தார். அவருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ராஜா (40) என்பவரும் சென்றார்.
பேரளம் அருகே மாங்குடி என்ற இடத்தில் சென்ற போது எதிரே மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் நாவலனை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள். இதில் சம்பவ இடத்திலேயே நாவலன் இறந்தார். அவருடன் வந்த ராஜா அதிர்ச்சி அடைந்து தப்பி ஓடி விட்டார்.   நாவலன் கொலையுண்ட தகவல் பரவியதும் பேரளம் பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. கடைவீதியில் இருந்த கடைகள் மற்றும் வீடுகளுக்கு நாவலனின் ஆதரவாளர்கள் தீ வைத்தனர். அந்த வழியாக வந்த 3 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு மயிலாடுதுறை - காரைக்கால் ரோட்டில் நாவலனின் ஆதரவாளர்கள் ரோட்டின் குறுக்கே மரங்களை வெட்டிப் போட்டனர். பேரளம்-காரைக்கால் ரோட்டிலும், பேரளம்- கொல்லு மாங்குடி ரோட்டிலும் ஆங்காங்கே மரங்களை வெட்டிப் போட்டு போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தினர். இதனால் மயிலாடுதுறை- காரைக்கால், மயிலாடுதுறை-திருவாரூர், பேரளம்-கும்பகோணம் மார்க்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
பேரளம் பகுதியில் பதட்டம் நிலவியதால் நேற்று இரவு முதல் பஸ்கள் ஓட வில்லை. இன்று காலையிலும் பஸ்கள் செல்லவில்லை. இதனால் பேரளம் பஸ் நிலையம் வெறிச்சோடியது.   பேரளம் பகுதியைச் சேர்ந்த சாராய வியாபாரி பன்னீர் என்பவருக்கும் நாவலனுக்கும் முன் விரோதம் இருந்தது. கடந்த செப்டம்பர் மாதம் இருதரப்பினரும் மோதிக் கொண்டனர். அப்போது வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. இதில் கட்டிட தொழிலாளி விஜி என்பவர் இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பன்னீர் உள்பட 12 பேர் மீதும், நாவலன் உள்பட 26 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் நாவலன் நேற்று மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளார். சாராய வியாபாரி பன்னீர் ஆட்களால் நாவலன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பேரளம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த இடுகை(post)தங்களை கவர்ந்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி

குவைத்: வெளி நாட்டவருக்கும் 1 மாத சம்பளம் போனஸ் - எம்.பி. வேண்டுகோள் !

குவைத்தின் தேசிய தினம் மற்றும் சுதந்திர தினத்தை குவைத் குடிமக்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குவைத்தில் பணிபுரியும் வெளிநாட்டவருக்கும் ஒரு மாத சம்பளம் போனஸாக வழங்கப்பட வேண்டும் என்று அந்நாட்டின் எம்.பி. ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குவைத் தனது 50வது தேசிய தினத்தையும், ஈராக்கின்  ஆக்கிரமிப்பிலிருந்து விடுதலையான 20வது சுதந்திர தினத்தையும், தற்போதைய அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் சபாஹ் பதவியேற்ற 5வது ஆண்டு விழாவையும் சிறப்பாக கொண்டாடும் வகையில் 11 இலட்சம் குவைத் குடிமக்களுக்கு 1,000 குவைத் தினார் (சுமார் 1.60 இலட்சம் ரூபாய்) வழங்கப்படும் என்றும் வீட்டிற்கு தேவையான அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்கள் 14 மாதங்களுக்கு இலவசமாகவும் வழங்கப்படும் என்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் நோக்குடன் உலகிலேயே மிக நீளமான தேசியக்கொடியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, தனியார் நிறுவனங்கள் குவைத்தில் பணிபுரியும் வெளிநாட்டவருக்கும் ஒரு மாத சம்பளத்தை போனஸாக வழங்க வேண்டும் என்று வலீத் அல்-தபதபயீ என்ற எம்.பி. அந்நாட்டின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் குறிப்பிடுகையில், ’குவைத்தின் தொழிலதிபர்களும், நிறுவன உரிமையாளர்களும் அன்பிலும் பொருளுதவி செய்வதிலும் பெயர் போனவர்கள்; அவர்கள் தமது சமூகக் கடமையாகக் கருதி தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும்  வெளிநாட்டவருக்கு ஒரு மாத சம்பளத்தை போனஸாக வழங்க வேண்டும்; இதன் மூலம் வெளிநாட்டினரையும் குவைத்தின் தேசிய தின மற்றும் சுதந்திர தின கொண்டாட்டங்களில் அங்கம் வகிக்கச் செய்ய வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுமார் 6 இலட்சம் இந்தியர்கள் குவைத்தில் பணிபுரிந்து வருகின்றனர். குவைத் கொண்டாட்டங்களை முன்னிட்டு போனஸ் கிடைக்கும் பட்சத்தில் அது அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த இடுகை(post)தங்களை கவர்ந்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி

ம.பி. ஐஏஎஸ் தம்பதியின் வீட்டில் ஐடி ரெய்டு-ரூ. 360 கோடி சொத்துக் குவிப்பு கண்டுபிடிப்பு!

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு ஐஏஎஸ் தம்பதியின் வீட்டில் நடந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில், ரூ. 360 கோடி அளவுக்கு சொத்துக்கள் குவித்து வைத்திருந்தது தெரிய வந்து அனைவரும் அதிர்ந்தனர்.

மத்தியப் பிரதேசத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளும், பிற அதிகாரிகளும் பெருமளவில் சொத்துக்களைக் குவித்து வருவது சகஜமாகி வருகிறது. இதுதொடர்பாக அந்த மாநில ஊழல் ஒழிப்புப் போலீஸ் பிரிவான லோகாயுக்தாவுக்கு வந்துள்ள புகார்கள் அதிர வைப்பதாக உள்ளது.

தாங்கள் கடந்த 2 வாரங்களில் நடத்திய சோதனைகள் குறித்த அறிக்கை ஒன்றை வருமான வரித்துறை, லோகாயுக்தாவுக்கு அளித்துள்ளது. அதன் பேரில் நடவடிக்கை எடுக்குமாறும் அது கோரியுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது...

ஐஏஎஸ் தம்பதியான அரவிந்த் ஜோஷி மற்றும் டினு ஜோஷி ஆகியோரின் வீடுகளில் கடந்த ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி வருமானவரித்துறை சோதனை நடத்தியது. அப்போது ரூ. 360 கோடி அளவுக்கு அவர்களுக்கு சொத்துக்கள் இருப்பது தெரிய வந்தது.

இவர்களிடம் ரொக்கமாக மட்டும் ரூ. 3 கோடி வரை வீட்டில் பணம் சிக்கியுள்ளது. இதுபோக வெளிநாட்டுப் பணத்தின் அளவு ரூ. 7 லட்சமாகும். மேலும், சூட்கேஸ் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த ரூ. 67 லட்சம் மதிப்பிலான தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. கைகளால் பணத்தை எண்ண முடியாமல் மெஷின் வைத்து எண்ணியுள்ளனர் அதிகாரிகள்.

1979ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான ஜோஷி, மொத்தம் 25 ஆடம்பர அபார்ட்மென்ட்களையும் வாங்கிக் குவித்துள்ளார். இவர்கள் எல்ஐசி பிரிமீயமாக மட்டும் ரூ. 3.5 கோடி வரை கட்டியுள்ளனர். ரூ. 3 கோடி வரை பங்குளை வாங்கிப் போட்டு வைத்துள்லனர்.

சோதனைக்குப் பின்னர் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

கடந்த திங்கள்கிழமை பொதுப்பணித்துறையில் செயற் பொறியாளராகப் பணியாற்றும் அசோக் குமார் ஜெயின் என்பவரின் மனைவிக்குச் சொந்தமான இரு வங்கி லாக்கர்களை அதிகாரிகள் திறந்து சோதனையிட்டபோது அஹ்கு ரூ. 1.6 கோடி ரொக்கப் பணம், 7.8 கிலோ தங்கக் கட்டிகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து ஜெயின் மீது வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்துக்கள் குவித்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதேபோல யோகிராஜ் சர்மா என்கிற சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநர் வீட்டில் நடந்த ரெய்டின்போது எதிர்பாராத இடத்திலிருந்தெல்லாம் பணம் சிக்கியது. வாஷிங்மெஷின், வாட்ரோப், தலையணை, பெட்ஷீட், அடுக்களையில் வைக்கப்பட்டிருக்கும் மசாலாப் பொருட்கள் வைக்கும் டப்பாக்கள் என வீடு முழுவதும் பணத்தைப் பதுக்கி வைத்திருந்தார் சர்மா.

மேலும் இவரது வீட்டின் படுக்கை அறையில் இருந்த பெட்டுக்குக் கீழேயும் பணக் கட்டுக்களை நீட்டாக அடுக்கி வைத்திருந்தனர். அதன் மேல்தான் சர்மா
தம்பதியினர் படுத்துத் தூங்குவார்களாம்.
 
சர்மா வீட்டில் நடந்த சோதனையின்போது ரூ. 1.75 கோடி ரொக்கம், ரூ. 6 லட்சம் வெளிநாட்டுப் பணம் சிக்கியதாம்.

இந்தியாவைப் போய் ஏழை நாடு என்கிறோமே...!        நன்றி : தட்ஸ் தமிழ்  இந்த இடுகை(post)தங்களை கவர்ந்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி