போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு ஐஏஎஸ் தம்பதியின் வீட்டில் நடந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில், ரூ. 360 கோடி அளவுக்கு சொத்துக்கள் குவித்து வைத்திருந்தது தெரிய வந்து அனைவரும் அதிர்ந்தனர்.
மத்தியப் பிரதேசத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளும், பிற அதிகாரிகளும் பெருமளவில் சொத்துக்களைக் குவித்து வருவது சகஜமாகி வருகிறது. இதுதொடர்பாக அந்த மாநில ஊழல் ஒழிப்புப் போலீஸ் பிரிவான லோகாயுக்தாவுக்கு வந்துள்ள புகார்கள் அதிர வைப்பதாக உள்ளது.
தாங்கள் கடந்த 2 வாரங்களில் நடத்திய சோதனைகள் குறித்த அறிக்கை ஒன்றை வருமான வரித்துறை, லோகாயுக்தாவுக்கு அளித்துள்ளது. அதன் பேரில் நடவடிக்கை எடுக்குமாறும் அது கோரியுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது...
ஐஏஎஸ் தம்பதியான அரவிந்த் ஜோஷி மற்றும் டினு ஜோஷி ஆகியோரின் வீடுகளில் கடந்த ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி வருமானவரித்துறை சோதனை நடத்தியது. அப்போது ரூ. 360 கோடி அளவுக்கு அவர்களுக்கு சொத்துக்கள் இருப்பது தெரிய வந்தது.
இவர்களிடம் ரொக்கமாக மட்டும் ரூ. 3 கோடி வரை வீட்டில் பணம் சிக்கியுள்ளது. இதுபோக வெளிநாட்டுப் பணத்தின் அளவு ரூ. 7 லட்சமாகும். மேலும், சூட்கேஸ் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த ரூ. 67 லட்சம் மதிப்பிலான தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. கைகளால் பணத்தை எண்ண முடியாமல் மெஷின் வைத்து எண்ணியுள்ளனர் அதிகாரிகள்.
1979ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான ஜோஷி, மொத்தம் 25 ஆடம்பர அபார்ட்மென்ட்களையும் வாங்கிக் குவித்துள்ளார். இவர்கள் எல்ஐசி பிரிமீயமாக மட்டும் ரூ. 3.5 கோடி வரை கட்டியுள்ளனர். ரூ. 3 கோடி வரை பங்குளை வாங்கிப் போட்டு வைத்துள்லனர்.
சோதனைக்குப் பின்னர் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கடந்த திங்கள்கிழமை பொதுப்பணித்துறையில் செயற் பொறியாளராகப் பணியாற்றும் அசோக் குமார் ஜெயின் என்பவரின் மனைவிக்குச் சொந்தமான இரு வங்கி லாக்கர்களை அதிகாரிகள் திறந்து சோதனையிட்டபோது அஹ்கு ரூ. 1.6 கோடி ரொக்கப் பணம், 7.8 கிலோ தங்கக் கட்டிகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து ஜெயின் மீது வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்துக்கள் குவித்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதேபோல யோகிராஜ் சர்மா என்கிற சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநர் வீட்டில் நடந்த ரெய்டின்போது எதிர்பாராத இடத்திலிருந்தெல்லாம் பணம் சிக்கியது. வாஷிங்மெஷின், வாட்ரோப், தலையணை, பெட்ஷீட், அடுக்களையில் வைக்கப்பட்டிருக்கும் மசாலாப் பொருட்கள் வைக்கும் டப்பாக்கள் என வீடு முழுவதும் பணத்தைப் பதுக்கி வைத்திருந்தார் சர்மா.
மேலும் இவரது வீட்டின் படுக்கை அறையில் இருந்த பெட்டுக்குக் கீழேயும் பணக் கட்டுக்களை நீட்டாக அடுக்கி வைத்திருந்தனர். அதன் மேல்தான் சர்மா
தம்பதியினர் படுத்துத் தூங்குவார்களாம். சர்மா வீட்டில் நடந்த சோதனையின்போது ரூ. 1.75 கோடி ரொக்கம், ரூ. 6 லட்சம் வெளிநாட்டுப் பணம் சிக்கியதாம்.
இந்தியாவைப் போய் ஏழை நாடு என்கிறோமே...! நன்றி : தட்ஸ் தமிழ் இந்த இடுகை(post)தங்களை கவர்ந்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி

தம்பதியினர் படுத்துத் தூங்குவார்களாம்.
இந்தியாவைப் போய் ஏழை நாடு என்கிறோமே...! நன்றி : தட்ஸ் தமிழ் இந்த இடுகை(post)தங்களை கவர்ந்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக