தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.1.11

ஃபலஸ்தீன் சுதந்திர நாட்டிற்கு ரஷ்யா ஆதரவு


மாஸ்கோ,ஜன.20:ஃபலஸ்தீன் சுதந்திர நாட்டிற்கு ரஷ்ய அதிபர் திமித்ரி மெத்வதேவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.


முன்னாள் சோவியத் யூனியன் கடந்த 1988 ஆம் ஆண்டே ஃபலஸ்தீன் நாட்டை அங்கீகரித்துள்ளது எனவும் அந்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனவும் மெத்வதேவ் பிரகடனப்படுத்தியுள்ளார்.


ரஷ்ய அதிபர் என்ற நிலையில் மெத்வதேவ் முதன் முதலாக ஃபலஸ்தீன் சென்றுள்ளார். அவ்வேளையில்தான் இதனை அறிவித்தார் அவர்.
ரஷ்யாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமுமில்லை. கிழக்கு ஜெருசலத்தை தலைநகராகக் கொண்ட சுதந்திர ஃபலஸ்தீனுக்கு ஏற்கனவே நாங்கள் ஆதரவு வழங்கியுள்ளோம்.எதிர்காலத்திலும் அது தொடரும் என மெத்வதேவ் தெரிவித்தார்.

பிரேசில்,அர்ஜெண்டினா உள்பட பல நாடுகளும் கடந்த இரண்டு மாதங்களிடையே ஃபலஸ்தீன் சுதந்திர நாட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இஸ்ரேலுடனான சமாதான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ள சூழலில் தங்களின் நாட்டிற்கு ஐ.நாவின் அங்கீகாரத்தை பெறுவதற்காக ஃபலஸ்தீன் ஆலோசித்து வருகிறது.

ஐரோப்பிய நாடான நார்வேயும் ஃபலஸ்தீனை அங்கீகரித்துள்ளது. 1988 ஆம் ஆண்டில் ஃபலஸ்தீனை அங்கீகரித்த ஒரே நாடு சோவியத் ரஷ்யா என மெத்வதேவிற்கு பதில் அளித்த ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்  நன்றி: பாலைவன தூது
இந்த இடுகை(post)தங்களை கவர்ந்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி

0 கருத்துகள்: