தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.9.11

இவர்கள் போலீஸா! பயங்கரவாதிகளா!


பரமக்குடியில் இமானுவேல்‌ சேகரன் நிகழ்ச்சியில் தமிழகமக்கள் முன்னேறக்கழக நிறுவனர் ஜான்பாண்டியன் கலந்து கொள்வதற்காக செல்லமுயன்றார். அவர் நெல்லை மாவட்டம் வல்லநாடு பகுதியில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். .

ஜான்பாண்டியனை கைது செய்ததாக செய்தி பரவியதையடுத்து பரமக்குடியில் மறியல், கலவரம் ஆகியவை ஏற்பட்டது. இதில் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் கலவரத்தை அடக்க கண்ணீர்புகை குண்டு வீசப்பட்டது. தொடர்ந்து வன்முறை நீடித்ததால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். 

துப்பாக்கிச் சூட்டில் முதலில் 3 பேர் உயிரிழந்தனர்.. பின்னர் சிகிச்சை பலன் அளிக்காமல் ஒருவர் பின் ஒருவராக தற்போது வரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடைபெற்ற பரமக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பரமக்குடி, சுற்று வட்டார கிராமங்களில் பாதுகாப்புக்காக 3ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  போலீஸ் வாகனம் எரிப்பு, துப்பாக்கிச் சூடு, 144 தடை உத்தரவையடுத்து பரமக்குடியில் பதற்றம் நிலவுகிறது.

1, பரமக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு வைகோ கண்டனம்!  அமைதி காக்க வேண்டுகோள்!

2, இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று துப்பாக்கி சூடு: காவல்துறை அணுகுமுறைக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்!

சிந்திக்கவும்: இப்படியாக குடிமக்களை கொன்று பயங்கரவாத போலீஸ் துறை சாதனை படைத்துள்ளது! மக்கள் கலவரத்தில் ஈடுபடுகிறார்கள் என்றால் அதை சமாளிக்க கண்ணீர்புகை, தடியடி, ரப்பர் குண்டு பிரயோகம், தண்ணீரை பீச்சி அடிப்பது இப்படி நடத்துவது தவறல்ல அதை மீறி துப்பாக்கி சூடு நடத்துவது வடிகட்டிய அயோக்கியத்தனம் பயங்கரவாதம்.

வெறும் கையேடு கலவரம் செய்யும் மக்களை துப்பாக்கியால் சுட்டு கொல்வதற்கு அல்ல உங்கள் கைகளில் துப்பாக்கிகள்  கொடுக்கப்பட்டிருப்பது. மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி கொண்டு அவர்களை பாதுகாப்பதை விட்டவிட்டு கலவரத்தை சமாளிக்க முடியாமல் துப்பாக்கி மூலம் உயிர்களை பறித்தது கடைந்தெடுத்த பயங்கரவாதம்.

கலவரம் செய்யும் மக்களை கலைக்க  தண்ணீரை பீச்சி அடிக்கும் வாகனம், ரப்பர் தோட்டாக்கள், கற்களை கொண்டு அடித்தால் அடி மேலே விழாமல் தடுக்க பைபர் தடுப்புகள்என்று இவர்களுக்கு மக்கள் வரிபணத்தில் வாங்கி கொடுக்கப்பட்டிருக்கும் கவசங்களோஏராளம். இப்படி இவர்கள் நோகாமல் நொங்கு திங்க!  கல்லடி படாமல், சுலபமாக கொஞ்சபேரை சுட்டு கொன்று கலவரத்தை அடக்கி விட நினைகிறார்கள். மொத்தத்தில் இவர்களுக்கு கொடுக்கப்படும் பயிற்ச்சிகளும், சம்பளமும் வீண்தான்.  வீணாக மக்கள் பணத்தில் மக்களை கொல்ல ஒரு பயங்கரவாத படை உருவாக்கப்பட்டிருகிறது என்பதே  உண்மை.
நட்புடன்: புதியதென்றல்.

0 கருத்துகள்: