தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.9.11

மீண்டும் ரத யாத்திரை அத்வானி அறிவிப்-முஸ்லிம்கள் விழித்து கொள்ளுகள்


நாட்டில் தலை விரித்தாடும் ஊழலுக்கு எதிராக வட மாநிலங்களில் ரத யாத்திரையை மேற்கொள்ளப் போவதாக அத்வானி அறிவித்துள்ளார்.
அத்வானியின் இந்த அறிவிப்பு குறித்து பா.ஜ.க தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நம்பிக்கை கோரும் ஓட்டெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் பொதுசெயலாளர் அமர் சிங்குடன், பா.ஜ. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
வாக்களிக்க லஞ்சம் கொடுக்கப்பட்டதை நாடாளுமன்றத்தில் பணத்தை காட்டி அம்பலப்படுத்திய பா.ஜ. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்யப்பட்டனர் அதற்கு அக்கட்சி கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இது குறித்து மக்களவையில் கடந்த வியாழக்கிழமை பேசுவதற்கு அத்வானிக்கு அனுமதி கிடைக்கவில்லை. பின்னர், வெளியே பேட்டியளித்த அத்வானி ஊழலை எதிர்த்து ரத யாத்திரை செல்லப் போவதாக அறிவித்தார்.
இதனை தொடர்ந்து தலைநகர் டெல்லியில் பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானி வீட்டில் பா.ஜ. தலைவர்கள் நேற்று கூடினர். இதில் கட்சி தலைவர் நிதின் கட்கரி மற்றும் சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, அனந்த்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். அத்வானி மேற்கொள்ளும் ரத யாத்திரை குறித்து ஆலோசனை நடத்தினர். யாத்திரையை எப்போது, எங்கிருந்து தொடங்குவது, எந்தெந்த மாநிலங்கள் வழியாக செல்வது என்பது பற்றி தலைவர்கள் யோசனை தெரிவித்தனர். கோவா, உத்தரகண்ட், உ.பி. பஞ்சாப் மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவை தேர்தல் நடக்க உள்ளதால் அந்த மாநிலங்கள் வழியே யாத்திரை செல்வது குறித்து முக்கிய விவாதம் நடந்தது.
தொடர்ந்து மூன்று மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் அரசியல் நிலவரங்கள் குறித்தும் பா.ஜ. வகுக்க வேண்டிய வியூகங்கள் பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது. காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி யாத்திரை தொடங்கலாம் என்று தெரிகிறது. மீண்டும் தலைவர்கள் கூடி ஆலோசித்த பின் யாத்திரை செல்லும் பாதை இறுதி செய்யப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

0 கருத்துகள்: