தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.9.11

காந்தியுடன் ஹசாரேவை ஒப்பிடக்கூடாது - கா‌‌ந்‌தி பேர‌ன் துஷார் காந்தி

அ‌ண்ணா ஹசாரேவை சுற்றி ஊழல்வாதிகள் உள்ளதா‌ல் காந்தியுடன் அவரை ஒப்பிடக்கூடாது'' எ‌ன்று மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி கூ‌றினா‌ர்.

 சர்வோதய சர்வதேச அறக்கட்டளையின் ஆந்திர மாநிலக் கிளையின் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தலைமையேற்றுப் பேசிய அவர், லோக்பால் மசோதாவினால் ஊழலை வேரோடு களையமுடியும்

என்று தோன்றவில்லை. ஊழல் என்பது நம் உள்ளுக்குள் ஒவ்வோர் மட்டத்திலும் பரவியிருக்கிறது. அரசியலில் இருந்தும் அதிகார மட்டம், நிர்வாகத்தில் இருந்தும் ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதாவினால் முடியாது.

வெறும் சட்டதிட்டங்களால் மட்டும் இந்த சமுதாயத்தில் அடியோடு புரையோடிப் போயிருக்கும் ஊழலை ஒழிக்கமுடியாது என்று கருதுகிறேன். நேர்மை என்பதும் உண்மை என்பதும் தனிப்பட்டவர் வாழ்வில் இருந்து துவங்க வேண்டும். அதுவே, இந்த சமுதாயத்தினை மாற்றும். ஊழலற்ற சமூகத்தை உருவாக்கும்.

அண்ணா ஹசாரே காந்திய வழியான சத்தியாகிரக வழியில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து போராட்டம் நடத்தி வருவதால், எல்லோரும் அவரை இரண்டாவது காந்தி என்று அழைக்கிறார்கள். ஆனால் அவர் ஒருவர் மட்டும் இந்தப் போராட்டத்தை நடத்தி வரவில்லை. அவரைச் சுற்றி ஊழல்வாதிகள் உள்ளனர். நேர்மையற்றவர்களும் சுயநலக்கார அதிகாரிகளும் உள்ளனர். காந்தியுடன் அண்ணா ஹசாரேவை ஒப்பிடக்கூடாது.

 தேசியப் போராட்டத்தின் போது காந்தியுடன் இருந்தவர்கள் நேர்மையானவர்கள். ஆனால், இப்போது அண்ணாவுடன் இருக்கும் ஒருவரைக் கூட அப்படி நாம் பார்க்கமுடியாது. எனவே முதலில் நாம் நேர்மையானவர்களாக, உண்மையானவர்களாக இருக்கத் தொடங்குவோம். அதன் பிறகு இந்த சமூகத்தைப் பற்றி சிந்திக்கலாம் என்று துஷார் காந்தி கூ‌றினா‌ர்.

0 கருத்துகள்: