ராசீவ் கொலை வழக்கில் சந்திராசாமி, சுப்பிரமணியசாமி உள்ளிட்ட குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி, ‘உண்மைக் குற்றவாளிகளைக் கூண்டிலேற்று’ என்ற முழக்கத்தோடு நெல்லை சந்தைக்கருகில் தமிழர்களம் நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடாத்தியது
அதில் உரையாற்றிய அதன் பொதுச்செயலாளர் அரிமாவளவன், “நாங்கள் எந்தக் கொலையையும் ஆதரிக்கிறவர்கள் அல்லர். ராஜீவ் கொலையைக்கூட ஆதரிக்கவில்லை. ஆனால், ஈழத்தில்
ராஜீவ் அனுப்பிய இந்தியப் படைகள் செய்த அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமா? அப்பாவிப் பெண்களும் ஆதரவற்றத் தமிழர்கள் பல்லாயிரக் கணக்கில் கொல்லப்பட்டனரே!அதில் உரையாற்றிய அதன் பொதுச்செயலாளர் அரிமாவளவன், “நாங்கள் எந்தக் கொலையையும் ஆதரிக்கிறவர்கள் அல்லர். ராஜீவ் கொலையைக்கூட ஆதரிக்கவில்லை. ஆனால், ஈழத்தில்
தனுவுடைய பெற்றோர்களும் உடன்பிறப்புகளும் அவள் கண்ணெதிரேயே கொல்லப்பட்டனர் பாலியில் வல்லுறவினால் சிதைக்கப்பட்டனர். அவள் கொடுமைகளால் பாதிப்புக்கு உள்ளானவளாயிற்றே!
தன் கணவன் கோவலன் பாண்டிய நெடுஞ்செழியனால் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு பாண்டியனை வீழ்த்தியவள் கண்ணகி. அந்தக் கண்ணகிக்கு தமிழ்நாட்டிலே சிலை உண்டு, சிற்பங்கள் உண்டு, கோயில் உண்டு, கோட்டம் உண்டு, மாபெரும் இலக்கியம் உண்டு.
ஈழத்துக் கண்ணகி தனு தன்னுடைய மக்கள் பத்தாயிரம் பேரும் தன் சொந்தப் பெற்றோரும் உடன்பிறந்தோரும் கண்ணெதிரே சிதைக்கப்பட்டதைப் பார்த்தபோது நீதி கேட்டு வந்தாள் என்பதுதானே வரலாறு. இருந்தபோதும்கூட நாங்கள் ராசீவ் காந்தியின் கொலையை ஆதரிக்கவில்லை.
நாங்கள், சாந்தன் முருகன் பேரறிவாளனை விடுதலை செய்யுங்கள் என்று யாரிடமும் கெஞ்சவில்லை, தூக்குத் தண்டனையை நிறுத்துங்கள் என்று மனுப்போடவில்லை. மன்றாடவில்லை. மாறாக நீதி கேட்டு நெல்லைத் தெருவிலே இறங்கி நிற்கிறோம்.
குற்றவாளிகளைக் தண்டி! என்றுதான் நாங்களும் கேட்கிறோம். ஆனால், உண்மைக் குற்றவாளிகளைத் தண்டி என்று முழங்குகிறோம். ராஜீவ் காந்தி கொல்லப்பட்டு அரை மணி நேரத்திற்குப் பிறகுதான் “ராஜீவ் கொல்லப்பட்டுவிட்டார்” என்று குண்டு வெடித்த இடத்திற்கு வந்த கருப்பையா மூப்பனாரும் ஜெயந்தி நடராசனும் உறுதி செய்கிறார்கள்.
அவர்கள்தான் கொலை நடந்ததை முதலாவதாக அறிந்தவர்கள், உறுதி செய்தவர்கள். ஆனால், கொலை நடந்த 5 நிமிடங்களில் எங்கோ இருக்கிற சுப்பிரமணியசாமிக்குச் கொலை செய்யப்பட்டதை தனது உதவியாளர் வேலுச்சாமியிடம் உறுதி செய்கிறார்.
எப்படி? யார் கொடுத்த தகவல் அது? கொலைகாரர்களன்றி வேறு யார் கொடுத்திருக்க முடியும்? ஏன் சுப்பிரமணியசாமி அதை மறைக்கிறார்? கப்பலில் விருந்தோடு காத்திருக்கிற சந்திராசாமி எழுந்து நடனமாடுகிறார். இறந்ததைக் கொண்டாடுகிறார்.
ராஜீவைக் கொன்ற அந்த பெல்ட் குண்டை யாகத்தில் வைத்து எடுத்துக் கொடுத்ததே சந்திராசாமிதான் என்று அடித்துச் சொல்கிறார்கள் சாட்சிகள். ஆனால், ஏன் சந்திராசாமியை விசாரணைக்கு உட்படுத்தவில்லை?
சந்திராசாமியின் பெயரை எடுத்தவுடனேயே எதிரே இருந்த டேபிள் வெயிட்டை எடுத்து அடிக்கிறார் விசாரணை அதிகாரி கார்த்திகேயன். எப்படி விசாரணை நீதியோடும் நியாயத்தோடும் நடந்திருக்கும்?
ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி எம்.கே. நாராயணன் என்கிற மலையாள அதிகாரியிடம் இன்றும் இருக்கிறது. அவர் அந்த முக்கிய ஆதாரத்தைத் தர மறுக்கிறார். என்ன காரணம்? அங்கேதான் மர்மம் மறைந்து கிடக்கிறது.
இவர் நாட்டின் உயரிய பதவியில் இருந்தவர். இப்போது மேற்கு வங்க ஆளுனராக இருக்கிறார். ஆனால், மும்பைக் குண்டு வெடிப்பில் தேடப்படும் ஹெட்லி என்கிற அமெரிக்கக் குற்றவாளியை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரும்போது அவர் பேசிய தொலைப்பேசி உரையாடலைப் பதிவு செய்து விக்கிலீக்ஸ் இப்போது வெளியிட்டிருக்கிறது.
“நாங்கள் மக்களைச் சமாளிக்க கேட்பது போலக் கேட்கிறோம். நீங்கள் ஆக வேண்டியதைப் பாருங்கள்” என்று நாட்டுக்குப் பச்சைத் துரோகம் செய்கிறார். இப்படிப்பட்டவர்களிடம்தான் இப்போது நாடு சிக்கிக் கொண்டிருக்கிறது.
பத்து ரூபாய் திருட்டுக்கு குற்றவாளிகளை நெம்பி நொங்கு எடுக்கிற காவல்துறை இந்த தேசத் துரோகிகளை கொண்டு வந்து நான்கு தட்டு தட்டி உண்மைகளைக் கக்க வைக்க வேண்டாமா?
சந்திராசாமி, சுப்பிரமணியன்சாமி, நரசிம்மராவ் ஆகியோரின் கூட்டாளிகள்தான் ராஜீவைக் கொன்ற கொலையாளிகள் என்று பலர் நம்புகிறார்கள். ஆதாரங்களை அள்ளி அள்ளி வைக்கிறார்கள்.
ராஜீவ் இறந்தது தொடர்பான விசாரணை ஆனா ஆவன்னா போடும் முன்னரே முதல்நாளே முந்திக் கொண்டு வந்த சுப்பிரமணியசாமி, “விடுதலைப் புலிகள்தான் கொன்றார்கள்” என்று திசை திருப்புகிறார். “அதோ ஒடுகிறான் பார் கள்ளன்” என்று பிடிக்க வருகிறவர்களைத் திசை திருப்புகிற திருடனைப் போல இந்தச் சுனா சானா நடந்திருக்கிறார்.
ஆனால் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்ற எடுபிடிகள், தங்கபாலு போன்ற தரங்கெட்டதுகள் அப்பாவிகளின் கொலைக்காக தொண்டைகளை இரவல் எடுத்துக் கத்துகிறார்கள். ராஜீவ் காந்தியின் கொள்கையோடு முரண்படுகிற நாங்களே ஆதங்கத்தோடு “உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடியுங்கள்” என்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.
ஆனால், எவனையாவது கொன்றால் சரி என்ற போக்கில் தமிழரல்லாத தங்கபாலு, இளங்கோவன் போன்ற காங்கிரசார்கள் அலைகிறார்கள். அதே வேளையில் பார்ப்பனரானாலும் மணிசங்கர ஐயர் போன்ற தமிழர்கள் அப்பாவித் தமிழர்களைக் காக்க நினைக்கிறார்கள்.
ஜெயலலிதா அவர்கள் பார்தீனியம் என்கிற நச்சுக் களைகளை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள். பார்தீனியத்தை காங்கிரஸ் புல் என்றுதான் நாட்டுப்புறத்தில் சொல்வார்கள். காங்கிரசுப் புல்லுருவிகளை ஒழிக்க வேண்டும்.
நாங்கள் மரண தண்டனைக்கு எதிரானவர்கள் என்பதால் காங்கிரசுக்குத் தமிழ்நாட்டு மக்கள் ஆயுள் தண்டனை கொடுத்துவிட்டார்கள். ஆனால், தங்கபாலு போன்றவர்கள் காங்கிரசைத் தூக்கில்
தொங்கவிட்டுவிட்டார்கள். என்ன செய்வது? எப்படியோ காங்கிரசு என்கிற களை ஒழிந்து தமிழ்நாடு செழித்தால் நாட்டுக்கு நல்லது. அப்போதுதான் நல்லவர்கள் வாழ முடியும். குற்றவாளிகளைச் சிறையில் தள்ள முடியும்.
தொங்கவிட்டுவிட்டார்கள். என்ன செய்வது? எப்படியோ காங்கிரசு என்கிற களை ஒழிந்து தமிழ்நாடு செழித்தால் நாட்டுக்கு நல்லது. அப்போதுதான் நல்லவர்கள் வாழ முடியும். குற்றவாளிகளைச் சிறையில் தள்ள முடியும்.
குற்றவாளிகள் என்று கருதப்படும் சந்திராசாமி, சுப்பிரமணியசாமி, எம்.கே. நாராயணன், கார்த்திகேயன் கும்பலை உள்ளே தள்ளும்வரை நாங்கள் ஓயப்போவதில்லை.
நல்லவர்களையும் அப்பாவிகளையும் உயிரைக் கொடுத்தேனும் காப்போம் என்று சூளுரைக்கிறோம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக