தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.8.11

'வெல்வோம் அல்லது மரணமடைவோம்' : கடாபியின் புதிய அறிவிப்பு


வெற்றி பெறுவோம் அல்லது வீர மரணமடைவோம் என லிபிய அதிபர் மௌமர் கடாபி மீண்டும் அறிவித்துள்ளார்.
தலைநகர் திரிபொலியின் பெரும்பாலான பகுதிகளை கடாபி படைகளிடமிருந்து கைப்பற்றியுள்ள கிளர்ச்சிப்படை, கடாபியின் கோட்டை, திரிபொலி விமான நிலையம் என்பவற்றையும் நேற்று தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன.
இந்நிலையில் நேற்றிரவு கடாபி விடுத்த வானொலி அறிவிப்பில்
'ஒரு முடிவு காணும் வரை,  அரச படைகள் தொடர்ந்து யுத்தம் புரியும் எனவும், தான் திரிபொலியை  சுற்றியே இருப்பதாகவும், எந்தவித ஆபத்து இருப்பதாகவும் உணரவில்லை' எனவும் அறிவித்துள்ளார்.

நேட்டோ படையினரால் 64 தடவைகள் தனது அல் அசிசியா கோட்டை தாக்கப்பட்டதாகவும், இதையடுத்தே அங்கிருந்து வெளியேறும் முடிவுக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ள அவர், தலைநகர் திரிபொலியிலிருந்து கிளர்ச்சியாளர்களை விரட்டியடிக்க ஒவ்வொரு லிபியரும், வீதிக்கு இறங்க வேண்டும்மெனவும் பெண்கள், இளைஞர்கள், பூர்வீக குடிகள் என அனைவரும் வீதிக்கு இறங்கினால் தான் துரோகிகளை விரட்டியடிக்க முடியும் எனவும் கூறியுள்ளார். மேலும் தன்னை காணமுடியவில்லை என வருத்தமடையவேண்டாம்.  பாதுகாப்பானதும், இரகசியமானதுமான இடத்திற்கு மாற்றம் பெற்றுள்ளேன் என்றார்.
இதேவேளை தலைநகர் திரிபொலிக்கு அண்மையில் உள்ள அஜெலாட் நகர் மீது கிளர்ச்சிப்படைகள் தாக்குதலை தொடங்கியுள்ளன. மேலும் துனிசிய, லிபிய எல்லை பகுதியில் உள்ள துறைமுக நகரான சுவாரா (Zuwara) விலும் கடும் மோதல் தொடங்கியுள்ளது.
இத்தாக்குதல்கள் தொடர்பில் கடாபியின் பேச்சாளர் மௌசா இப்ராஹிம் தெரிவிக்கையில், கிளர்ச்சி படைகள் லிபியாவை சீறும் எரிமலைகளாக மாற்றிக்கொண்டிருக்கின்றன என எச்சரித்துள்ளார்.

இதேவேளை கடாபி ஒழிந்திருக்க கூடும் என நம்பப்படும் இரகசிய பாதாள அறைகள் மீது கிளர்ச்சிப்படையின் கவனம் குவிந்துள்ளது. அங்கு அவர் மனித கேடயங்களாக குழந்தைகள் பெண்களை பிடித்து வைத்திருக்க கூடும் என மெயில் ஆன்லைன் இணையத்தளம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலவேளை அப்பாதையின் ஊடாக நேச நாடுகளுக்கு கடாபி தப்பிச்செல்லக்கூடும் எனவும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

எனினும் கடாபி இன்னமும் லிபியாவிலேயே இருப்பதாக பெண்டகன் உறுதிப்படுத்தியுள்ளது.
திரிபொலியை கைப்பற்ற முன் தனது கோட்டையிலிருந்து கடாபி நிகழ்த்திய இறுதி உரை

0 கருத்துகள்: