தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.8.11

விண்வெளி மையத்திற்கு சென்ற ரஷ்ய விண்கலம் வெடித்துச் சிதறியது


சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்ட ரஷ்ய விண்கலம் வெடித்துச் சிதறியது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்து பல நாட்டு விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். விண்வெளி நிலையத்தில் தற்போது 6 விஞ்ஞானிகள் தங்கி உள்ளனர். இவர்களுக்கு தேவையான பொருள்கள் மற்றும்
எரிபொருள், ஆக்சிஜன் போன்றவை 2 மாதங்களுக்கு ஒருமுறை விண்கலம் மூலம் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக, சரக்கு விண்கலத்தை ரஷ்யா இயக்கி வருகிறது. விண்வெளி நிலையத்துக்கு பொருள்களை கொண்டு சேர்க்கும் பணிகளை ரஷ்யா 1978-ம் ஆண்டு முதல் மேற்கொண்டு வருகிறது. 
 
இந்நிலையில் நேற்று எம்-12 எம் என்னும் ஆளில்லா விண்கலம் ஒன்று பல டன் எடையுள்ள சரக்குகளை ஏற்றிக்கொண்டு, விண்வெளி நிலையத்துக்கு புறப்பட தயாரானது. ரஷ்யாவின் கஜகஸ்தான் மாநிலத்தில் உள்ள பைகானூர் ஏவுதளத்தில் இருந்து, நேற்று மாலை 5.30 மணி அளவில், விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்கலம், நீள்வட்ட பாதையில் நிலைநிறுத்தும் முன்பு, பூமியை நோக்கி திரும்பியது. சிறிது நேரத்தில் தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவம் ரஷ்ய விஞ்ஞானிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த விபத்தால், விண்வெளி நிலையத்தில் தங்கி இருக்கும் விஞ்ஞானிகளின் பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் கிடையாது என்று, விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்: