தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.10.12

மத்திய கிழக்கில் சமாதானம் நிலவ ஹஜ் யாத்திரிகர்கள் பிரார்த்தனை


வருடாந்த ஹஜ் புனித யாத்திரையை முன்னிட்டு ஆ யிரக்கணக்கான முஸ்லிம்கள் சவுதியிலுள்ள மக்கா புனித தலத்துக்கு ஒவ்வொரு நாளும் வந்த வண்ண ம் உள்ளனர்.மெக்காவிலுள்ள அரஃபாத் மலைக்கு மேலே சூரியன் உதிக்கும் போது யாத்திரிகர்களின் பெரும் கூட்டம் தமது பிரார்த்தனையை நிறைவேற் றினர்.இந்த யாத்திரிகர்களில் சிரியாவைச் சேர்ந்த அட்னான் டெர்கவி கருத்துரைக்கையில் மத்தியகிழ க்கில்
முக்கியமாக சிரியாவில் சமாதானம் நிலவ வேண்டும் என்பதே இம்மு
றை ஹஜ் யாத்திர்கர்களின் பிரதான பிரார்த்தனை யாக இருக்கும் எனக் கூறியுள்ளார். மேலும் தான் கடவுளிடம் தாழ்மையாக வேண்டிக் கொண்டது என்னவென்றால் அரேபிய மற்றும் முஸ்லிம் நாடுக ளில் அமைதி நிலவ வேண்டும் என்பதாகும். சிரியா பழைய நிலைக்குத் திரும்பி பாதுகாப்பான நாடாகும் என தாம் நம்புவதாகவும் அவர் கூறினார்.

பொதுவாக முஸ்லிம்கள் வாழ்க்கையில் ஒரு தடவையாவது அரேபியாவின் மெக்காவுக்கு புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ள வேண்டும் எனும் உந்துதல் உடையவர்கள் ஆவார்கள். ஐந்து நாட்களுக்கு இடம்பெறும் ஹஜ் யாத்திரையின் முக்கிய நிகழ்வுகள் புதன் கிழமை அன்று தொடங்கின.

0 கருத்துகள்: