தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.2.11

லிபியாவிலு​ம் மக்கள் எழுச்சிப் போ​ராட்டம் வீடியோ

திரிபோலி,பிப்.17:அரபுலகில் கொளுந்துவிட்டெரியும் மக்கள் எழுச்சி லிபியாவிலும் பரவியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்களும், பாதுகாப்பு படையினரும், அரசு ஆதரவாளர்களும் மோதிக் கொண்டதில் 14 பேருக்கு காயமேற்பட்டது.( வீடியோ )
இன்று நாடுமுழுவதும் ‘கண்டன தினம்’ கடைப்பிடிக்க போராட்டத்தில் ஈடுபட்டோர் இணையதளம் மூலமாக அழைப்பு விடுத்துள்ளனர்.
கடந்த 1996-ஆம் ஆண்டு திரிபோலி சிறையில் நடந்த கலவரத்தில் கொலைச் செய்யப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறைக் கைதிகளின் 

வழக்கறிஞரும், அரசை விமர்சிப்பவருமான ஃபாத்தி தெர்பிலின் கைதைத் தொடர்ந்து போராட்டம் வெடித்துள்ளது.சிறைக் கைதிகளின் உறவினர்கள் நடத்திய கண்டனப் பேரணியில் பொதுமக்களும் கலந்துகொண்டனர். திரிபோலியிலிருந்து 1000 கி.மீ தொலைவிலுள்ள துறைமுக நகரமான பெங்காசியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.

ஃபாத்திர் தெர்பில் பின்னர் விடுதலைச் செய்யப்பட்ட பிறகும் போராட்டம் அரசுக்கெதிரான மக்கள் எழுச்சியாக நாடு முழுவதும் பரவத் துவங்கியுள்ளது.

கர்னல் முஅம்மர் கத்தாபியின் 41 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தினர்.

பெங்காசியில் 10 போலீசாருக்கும் பொதுமக்களில் 4 பேருக்கும் காயமேற்பட்டது. எவருக்கும் கடுமையான காயம் ஏற்படவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டோர் கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளுடன் போலீசாரையும், அரசு ஆதரவாளர்களையும் எதிர்கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து செல்வதற்கு போலீசார் கண்ணீர் குண்டுகளை வீசியும், லத்திசார்ஜும் மேற்கொண்டனர்.

ஊழல்வாதிகளான ஆட்சியாளர்களுக்கெதிராக மக்கள் முழக்கமிட்டனர். லிபியாவைச் சார்ந்த எழுத்தாளரான இத்ரீஸ் அல் மெஸ்ரி கைதுச் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அல்ஜஸீராவுடனான தொலைபேசி உரையாடலில் அரசை விமர்சித்ததற்காக அவர் கைதுச்செய்யப்பட்டுள்ளார்.

அபூ ஸலீம் சிறையில் மோசமான சூழலை கண்டித்து சிறைக்கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து உருவான கலவரத்தில் 1200 சிறைக்கைதிகள் கொல்லப்பட்டனர். குற்றவாளிக்கெதிராக நடவடிக்கை எடுக்கவேண்டுமென பல வருடங்களாக அவர்களின் உறவினர்கள் கோரி வருகின்றனர். ஆனால் கத்தாஃபி அரசு இதற்கு செவிசாய்க்கவில்லை.

கத்தாஃபி ராஜினாமாச் செய்யவேண்டுமென லிபியாவில் மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த கோரிக்கையை முன்வைத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், மாணவர் தலைவர்கள் உள்பட 213 பேர் கையெழுத்திட்டுள்ளனர். அதேவேளையில் லிபியன் இஸ்லாமிக் ஃபைட்டிங் என்ற தடைச் செய்யப்பட்ட அமைப்பின் 110 உறுப்பினர்களை விடுதலைச்செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

வீடியோ: www.thanneerkunnam.net

0 கருத்துகள்: