தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.8.11

விண்வெளியில் முதல் உணவு விடுதி - 2016 இல் வரவிருக்கிறது!


2016 ம் ஆண்டு விண்வெளியில் நட்சத்திர விடுதி ஒன்றை அமைக்கும் திட்டத்தை ரஷ்யா முன்னெடுத்துள்ளது.

பூமியிலிருந்து 217 மைல் உயரத்தில் விண்வெளியில் அமைக்கப்படவிருக்கும் இந்நட்சத்திர விடுதி 7 பேர் தங்குவதற்கு வசதியாக நான்கு கேபின்களை கொண்டிருக்கும். அங்கிருந்து பார்த்தால் பூமி முழுக் கோளவடிவத்தில் அற்புதமாக காட்சியளிக்கும்.

2016ம் ஆண்டு இவ்விடுதி திறக்கப்படவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூமியிருந்து சொயுஸ் ராக்கெட் மூலம் பயணிகள் இங்கு கொண்டு செல்லப்படுவர். பயணத்திற்கு இரு நாட்கள் பிடிக்கும்.
விண்வெளிக்கு செல்வோர் தங்கிவருவதற்கு சர்வதேச விண்வெளி மையத்தின் ஓய்விடமே தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இப்புதிய விடுதி அதைவிட சிறப்பான, ஆரோக்கியமான வசதிகளை கொண்டிருக்கும் எனவும் உணவு, குடிநீர் என்பன பூமியிலிருந்து இந்த விடுதிக்கு சப்ளை செய்யப்படும்  எனவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் அல்கஹோலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்விண்வெளி விடுதி குறித்து இதன் தொழில்நுட்ப குழு தலைவர் செர்ஜி கொச்டென்கோ தெரிவிக்கையில், இது விண்வெளி ஆராய்சிக்காக பயணம் மேற்கொள்பவர்கள் தங்கிச்செல்லவும், சுற்றுலா நிமித்தம் விண்வெளிக்கு வர விரும்புவர்கள் தங்குவதற்கும் பயனளிக்கும் என கூறுகிறார்.
எனினும் 5 நாட்கள் இவ்விடுதியில் தங்குவதற்கு சுமார் 350,000 யூரோ செலவாகும் என்ற தகவல், உலக பணக்காரர்களுக்கே கொஞ்சம் கசப்பாக இருக்கிறதாம்1

0 கருத்துகள்: