தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.2.11

விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அசேஞ்ச் நோபல் பரிசுக்கு பரிந்துரை



நார்வே உலக நாடுகள் பலவற்றின் ரகசியங்களை அம்பலபடுத்திய விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அசேஞ்ச் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
நார்வேயை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஷ்னார் வேலன் என்பவர் தான் அசேஞ்சேயின் பெயரை சிபாரிசு செய்துள்ளார். அசேஞ்சேயின் இந்த செயல் கருத்து சுதந்திரம், தகவலறியும் உரிமை, ஜனநாயக உரிமைகளை நிலை நாட்ட பயன்பட்டதாக ஷ்னார் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தனின்யா நாட்டின் 24 ஆண்டு கால சர்வாதிகார அரசை முடிவுக்குக் கொண்டுவந்ததில் பெரும் பங்கு விக்கிலீக்சுக்கு உண்டு என அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், நோபல் பரிசு குழு இது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பாமல் இருந்து வருகிறது. ஸ்வீடன் நாட்டில் பாலியல் புகாருக்கு ஆளாகி, பிரிட்டனில் கைது செய்யப்பட்டவர் என்பதனாலும் அமெரிக்க இராணுவ ரகசியங்களை திருடியவர் என்ற குற்றச்சாற்றுக்கும் ஆளானவர் என்பதாலும் பரிசு குழு இது விசயத்தில் அமைதிகாத்து வருகிறது

0 கருத்துகள்: