தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.2.12

வேளச்சேரி என்கவுண்டர்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.

சென்னை - வேளச்சேரி போலீஸ் என்கவுன்டரை சிபிஐ விசாரி க்கக் கோரும் வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.வங்கிக் கொ ள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட 5 பேரை சுட்டுக்கொ ன்ற போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, சிபிஐ வி சாரணைக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தி ல் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனுவை இன் று விசாரித்த, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தர்மராவ் ம ற்றும் கிருபாகரன் ஆகியோர் அடங்கிய
பெஞ்ச், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதா என்பது குறித்து பதிலளிக்குமாறு தமி ழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

மார்ச் 6-ம் தேதிக்குள் தமிழக உள்துறைச் செயலர், டிஜிபி ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், சென்னை என்கவுன்டர் தொடர்பாக, சிபிசிஐடி விசாரணை நடக்கும் நிலையில் தாங்களும் விசாரிக்க வேண்டுமா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

முன்னதாக, கைதிகள் உரிமை கழகத்தின் இயக்குனரும், மனித உரிமை ஆர்வலருமான வழக்கறிஞர் புகழேந்தி தாக்கல் செய்த பொது நல மனுவில், 'வங்கிக் கொள்ளை வழக்குகளில் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தாமல், சந்தேகத்துக்குரிய நபர்களை கொலை செய்துவிட்டு, ஒட்டுமொத்த வழக்கையும் மூடவே விரும்பியுள்ளனர். அந்த வகையில் 5 பேரை கொலை செய்துவிட்டு, அது தற்காப்புக்காக செய்தது என்று போலீசார் கூறுகின்றனர். 

போலீஸ் கமிஷனரின் பேட்டியின்படி பார்த்தால், சுட்டுக் கொலை செய்வதற்கு முன்பு அவர்கள் யார்? என்பதே போலீசுக்கு தெரிந்திருக்கவில்லை. சுட்டு கொலை செய்த பிறகுதான் 4 பேர் பீகார் மாநிலத்தவர் என்பதையும், மற்றொருவர் மேற்குவங்காளத்தைச் சேர்ந்தவர் என்பதையும், அவர்களின் அடையாள அட்டையை வைத்து கண்டறிந்துள்ளனர். 

இவர்களின் முகவரியை போலீஸ் கமிஷனர் வெளியிட்டுள்ளார். சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஒருவரான சந்திரிகா ரே என்பவர், பாட்னாவைச் (பீகார்) சேர்ந்தவர். அவர் உயிருடன் இருக்கிறார். அவர் லாரி ஓட்டி வருவதாக நிருபர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருக்கிறார். 

அதோடு கமிஷனர் வெளியிட்ட, கொலை செய்யப்பட்ட அபய்குமாரின் முகவரியும் போலி. சுடுவதற்கு முன்பாக 5 பேருக்கும் போலீசார் விடுத்த எச்சரிக்கையின் மொழி என்ன என்பதையும், அந்த மொழியை அவர்கள் புரிந்துகொண்டார்களா? என்பதையும் நிருபர்களுக்கு கமிஷனர் சரிவர விளக்கவில்லை. 

5 பேரை சுட்டுக் கொல்லும் அளவுக்கு அங்கு துப்பாக்கி சூடு நடந்துள்ளது. ஆனால் அந்த வீட்டின் சிறிய அறையில் இருந்த டி.வி., வாஷிங் எந்திரம் போன்ற பெரிய பொருட்களில் எந்த துப்பாக்கி குண்டு சேதமும் ஏற்படவில்லை. 

எனவே போலீசார் மேற்கொண்ட துப்பாக்கி சூடு பற்றி சந்தேகம் எழுகிறது. குடிமகன் ஒருவரை போலீஸ் யாராவது சுட்டுக்கொன்றால், உடனடியாக அந்த போலீஸ் மீது கொலை குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அரசியல் சாசனம் கூறுகிறது. ஆனால் இதுவரை உள்துறை செயலாளர். டி.ஜி.பி. ஆகியோர் சம்பந்தப்பட்ட போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. 

எனவே துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்ட அடையாறு போலீஸ் துணை கமிஷனர் சுதாகர், மடிப்பாக்கம் உதவி கமிஷனர் கண்ணன், கிண்டி உதவி கமிஷனர் மாணிக்கவேல், மைலாப்பூர் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன், தேனாம்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவி, துரைப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டியன் ஜெயசில் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். 

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவதற்கு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: