தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.2.12

டைட்டானிக் கப்பல் மூழ்கி 100-வது ஆண்டுகள் நிறைவு: 5000 பொருட்கள் ஏலம்

ரிச்மோண்ட், பிப்ரவரி 29- டைட்டானிக் கப்பல் மூழ்கி இவ்வாண்டோடு 100 ஆண்டுகள் நிறைவடைவதை யொட்டி, அக்கப்பலில் இருந்த பொருட்கள் அனைத்து ம் எதிர்வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி ஏலத்திற்கு வருகின்ற ன.அக்கப்பலிலிருந்த 5000க்கும் மேற்பட்ட பொருட்கள் ஏ லத்திற்கு வரும் நிலையில், கப்பல் மூழ்கி உயிர்ப்பிழைத் தவர்களின் வாரிசுகள் தங்கள் மூதாதையர் வைத்திருந்த டைட்டானிக் கப்பல்
விபத்தின் நினைவு பொருட்களை ஏலத்தில் சேர்க்க போட் டி போட்டுக்கொண்டு தொலைப்பேசி வழி தொடர்புகொள்கின்றனர்.நியூயார்க் “Guernsey’s Auctioneers& Brokers” ஏல நிறுவனம் டைட்டானிக் கப்பலில் கிடைக்கப்பெற்ற பொருட்களை ஏலத்திற்கு விடும் பொறு[ப்பை பெற்றுள்ளது.“டைட்டானிக் கப்பலின் கோர விபத்தில் சிக்கி உயிர்ப்பிழைத்த 700 பேரின் வாரிசுகள், பலர் டைட்டானிக் கப்பல் விபத்தின் போது தங்கள் மூதாதையர்களுக்குக் கிடைத்த பொருட்களை ஏலத்திற்கு விட எங்களைத் தொடர்புக்கொள்கின்றனர். இவர்களில் ஒருவர், கப்பல் விபத்தின் போது, கடலில் மிதந்த பிணத்தின் மீது ஒட்டிக்கிடந்த ஒரு காகிதத்தைக் கூட ஏலத்திற்கு விட தயாராக உள்ளார்” என ஏலத்திற்கு விடுபவரான ஆரியன் எத்திங்கர் தெரிவித்தார்.“அந்த காகிதம் ஏலத்திற்கு எடுக்கப்படாவிட்டாலும், “ஏமி” என வைரம் பொறிக்கப்பட்ட சிறுமிக்கான கைச்சங்கிலி தனித்துவம் பெற்று ஏலத்தில் விற்கப்படலாம். டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளானபோது அதில் பயணம் செய்த 2228 பேரில் 1500 பேர் பலியாகிவிட்டனர். அந்த எண்ணிக்கையில் இருவரின் பேர் மட்டுமே “ஏமி” என பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.15 ஏப்ரல் 1912-ஆம் ஆண்டு இங்கிலாந்து Southampton-லிருந்து நியுயார்க் நகரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது, டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.

0 கருத்துகள்: