தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.11.12

கிரானைட் மோசடி : 56 கிரனைட் குவாரி அதிபர்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி அபராதம்?


சட்டவிரோத கிரனைட் குவாரிகள் தொடர்பான அ னைத்து விசாரணைகளும் இறுதிக்கட்டத்திற்கு வந் துவிட்டதாகவும், மோசடியில் ஈடுபட்ட 26 குவாரிக ளிடமிருந்து ரூ.10 ஆயிரம் கோடி அபராதமாக வசூ லிக்கப்பட வேண்டும்என சம்பந்தப்பட்ட கிரனைட் உரிமை தாரர்களுக்கு விரைவில் நோட்டீஸ் அனுப் பவுள்ளதாகவும் மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.மதுரை மேலூர் பகுதியில் 94 கிரா னைட் குவாரிகள் விதிமுறைகளை மீறி சட்ட விரோ தமாக
செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது. மதுரை கலெக்டர் அன் சுல்மிஸ்ரா தலைமையில் 18 குழுக்கள் அமைக்கப்பட்டு கடந்த 10 வாரங்க ளாக மேலூர் பகுதியில் உள்ள கிரானைட் குவாரிகளில் சோதனை நடத்தப்பட்டன. மோசடியில் ஈடுபட்ட குவாரிகள் மற்றும் கிரானைட் அலுவலகங்கள் 'சீல்' வைக்கப்பட்டது. தற்போது கிரானைட் குவாரிகளின் சட்ட விரோத நடவடிக்கைகள் தொடர்பான விசாரணை முடிவுக்கு வந்துள்ளது. குவாரிகளால் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு, நில ஆக்கிரமிப்பு விவரங்கள், சட்ட விரோதமாக இருப்பு வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்கள், குவாரி அதிபர்கள் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் ஆகியவை பட்டியலிடப்பட்டு வருகிறது.விதிமுறையை மீறி கிரானைட் குவாரிகளில் வெட்டப்பட்டுள்ள கிரானைட் அளவுகள் மதிப்பிடும் பணியும் முடிவுக்கு வந்துள்ளது. மேலும் குவாரிகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களையும் அதிகாரிகள் மதிப்பீடு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் ஒவ்வொரு கிரானைட் குவாரிக்கும் அபராத தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை மதிப்பீடு முடிக்கப்பட்டுள்ள 56 குவாரிகளுக்கு அபராத தொகையாக ரூ.10 ஆயிரம் கோடி வரை அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.




இது தொடர்பாக மதுரை கலெக்டர் அன்சுல்மிஸ்ரா கூறியதாவது : சட்ட விரோத கிரானைட் குவாரி தொடர்பான அனைத்து விசாரணைகளும் இறுதி கட்டத்திற்கு வந்து விட்டன. கள ஆய்வு முடிந்து இறுதி அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். விதி மீறலில் ஈடுபட்ட 63 குவாரிகளில் 56 குவாரிகளால் அரசுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி இந்த 56 குவாரிகளிடம் இருந்து அபராத தொகையாக ரூ.10 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கிரானைட் உரிமதாரர்களுக்கு விரைவில் நோட்டீசு அனுப்பப்படும். அவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுப்பதற்கும் வாய்ப்பு வழங்கப்படும். அதை தொடர்ந்து அபராத தொகை வசூலிக்கப்படும்.

இந்த நடவடிக்கைகளை இன்னும் ஒரு மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசுக்கு செலுத்த வேண்டிய அபராத தொகை மற்றும் கட்டணங்களை செலுத்தாமல் குவாரிகளில் இருந்து கிரானைட் கற்களை எடுக்க அனுமதி இல்லை. அவ்வாறு செய்தால் அது சட்டவிரோத நடவடிக்கையாக கருதப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்: