கிறீன்லாந்தில் மற்றுமொரு பாரிய பனிப்பிரதேச பட லம் உருகி கடல் நீரில் கரைந்துவிட்டது ஆராய்ச்சி யாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.நாசா வெ ளியிட்ட, 4 நாட்கள் வித்தியாசத்தில் எடுக்கப்பட்ட இரு செய்மதி படங்களில் இவ்வேறுபாடு தெளிவாக தெரிகிறது. மூன்று தசாப்தகாலமாக இப்பகுதியை செய்மதி மூலம் கண்காணித்து வருகின்ற போதும் இப்போது கண்டுள்ள காட்சிகள் முன் எப்போதும்
இல்லாத அபூர்வமானநிகழ்வென விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இல்லாத அபூர்வமானநிகழ்வென விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடல் நீரில் கரைந்து போன ஐஸ்கட்டி நிலப்பிரதேசத்தின் பரப்பு நான்கு நாட்களுக்குள் 40% வீதத்திலிருந்து 97% வீதமாக உயர்வடைந்துள்ளது. வழமையாக கோடைக்காலத்தில், கிறீன்லாந்து ஐஸ்கட்டி படலங்கள் கரைவது வழக்கம். ஆனால் இம்முறை எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிகமாக கரையத்தொடங்கியுள்ளது.
நாம் நினைத்திருக்கும் ஆபத்து வருவதற்கு இன்னமும் சில வருடங்களே இருக்கின்றன என்பதற்கு பெரியதொரு அறிகுறியே இந்த இயற்கை நிகழ்வுகள் என்கிறார் நாசாவின் தலைமை விஞ்ஞானி வலீட் அப்டலட்டி.
இறுதியாக 1889ம் ஆண்டு இப்பகுதியில் ஐஸ் கட்டி ப்பிரதேசம் அதிகளவு கரைந்திருந்ததே இதுவரை உச்சப்பதிவாக இருந்துவந்தது. அதனை இப்புதிய நிகழ்வு முறியடித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிரீன்லாந்தின் பீட்டர்மென் கிளாசியர் ஐஸ்படலம் பல கூறுகளாக பிளவு பட்டதில் மேன்ஹட்டன் நகரை விட இரண்டு மடங்கு பெரிதான தனிதனிபனிப்பாறைகள் உருவாகியிருந்தன.
இந்த அனர்த்தத்தின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் இப்புதிய செய்மதிப்படங்கள் வெளியாகியுள்ளன. மனிதனின் பல்வேறு சுயநல செயற்பாடுகளினால் உலகம் மிகவேகமாக வெப்பமடைந்து வருவதே இந்த அனர்த்தங்களுக்கு காரணமாக தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக