தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.7.12

பழுதடைந்த பேருந்தால் சிறுமி பலி : போக்குவரத்து துறை அதிகாரிகளை ஆஜராகுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு


பேருந்து விபத்தில் பலியான சிறுமி சுருதி தொடர்பி ல் சென்னை உயர் நீதிமன்றம் தானாகவே விசார ணைக்குஎடுத்துக்கொண்டுள்ளதுடன் இந்த வழக்கி ல் போக்குவரத்து அதிகாரிகள்  நாளை நீதிமன்றில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. தாம்பர த்தில் தனிபார் பேருந்தில் பயணம் செய்து கொண்டி ருந்த 2ம் வகுப்பு மாணவி ஸ்ருதி பேருந்தின் இருக் கை அடியில் இருந்த ஓட்டை வழியே கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்திருந்தார். இச்சிறுமியின் மர ணத்தை அடுத்து
பெற்றோர், அயலவர்களால் கடும் அதிருப்தி வெளியிடப்பட்
டுள்ளது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் மற்றும் சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், சிறுமியின் மரணத்தை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது என தெரிவித்ததுடன், இது தொடர்பில் விளக்கமளிக்க நாளை போக்குவரத்து துறை அதிகாரிகளை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.
பள்ளி நிர்வாகம் இந்த பேருந்தை குத்தகைக்கு எடுத்து பயன்படுத்துவதாக அனுமதி கோரியுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்னர்தான் போக்குவரத்துக் கழகம் இப்பேருந்தை பயன்படுத்த அனுமதி வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.  இவ்வளவு குறுகிய காலத்தில் பேருந்தில் ஓட்டை விழுந்தது எப்படி, இல்லை ஓட்டை விழுந்த பேருந்துக்குதான் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அனுமதி சான்றிதழ் வழங்கியதா? என்பது பற்றி விசாரிக்கவே நேரில் ஆஜராக வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்து ஆணையருக்கு சென்னை உயர்நீதி மன்றம் சம்மன் அனுப்பியிள்ளதாகத் தெரிகிறது. கூடவே தமிழக அரசுக்கும் சென்னை உயர்நீதி மன்றம் சார்பில் சம்மன் அனுப்பப் பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

மேலும் மோசமான நிலைமையில் உள்ள இவ்வாறான பேருந்துக்களுக்கு அனுமதி அளித்தது ஏன் என விளக்கம் அளிக்கவும் உயர் நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 சிறுமி ஸ்ருதியின் குடும்பத்திற்கு, ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

0 கருத்துகள்: