தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.2.11

கோத்ரா ரெயில் எரிப்பு:63 பேர் விடுதலை, 31 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு

அஹமதாபாத்,பிப்.22:2002-ம் ஆண்டு நடந்த கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கை விசாரித்த அஹ்மதாபாத் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 94 நபர்களில் 31 பேர் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302-இன்படி குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 63 பேர் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களின் தண்டனை வருகிற பிப்ரவரி 25-ஆம் தேதி

வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் சபர்மதி எக்ஸ்பிரஸின் S-6 பெட்டி எரிக்கப்பட்டதற்கு பின்னணியில் திட்டமிட்ட சதி நடந்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளது.

இதுத்தொடர்பான இன்னொரு கருத்து என்னவெனில், கோத்ரா ரெயில் நிலையத்தில் கரசேவகர்களுக்கும், முஸ்லிம் வியாபாரிகளுக்குமிடையே நடந்த வாக்குவாதம் முற்றி வன்முறையாக வெடித்தது என கூறப்படுகிறது.

நானாவதி கமிஷன் ரெயிலுக்கு வெளியேயிருந்துதான் எரிபொருள் ஊற்றப்பட்டுள்ளது எனக்கூறும் வேளையில், ரெயில்வே நிர்வாகம் நியமித்த பானர்ஜி கமிஷன் ரெயில் உள்பகுதியிலிருந்து எரிபொருள் பயன்படுத்தப்பட்டது என தெரிவிக்கிறது.

கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் முதல்வர் மோடி தலைமையில் நடந்த முஸ்லிம் இனப்படுகொலையில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொடூரமாக கொலைச் செய்யப்பட்டனர்.

கருவிலிருந்து குழந்தை உள்பட சிறுவ, சிறுமியர், பெண்கள் என பலரும் சங்க்பரிவார பயங்கரவாதிகளின் கொடூரத் தாக்குதல்களுக்கும், பாலியல் வன்புணர்வுக்கும் ஆளாக்கப்பட்டனர்.

ஆனால், இந்திய தேசத்தில் நடந்த மிகப்பெரிய, கொடூரமான இனப் படுகொலையை நிகழ்த்திய மோடி உள்பட சங்க்பரிவார்கள் சுதந்திரமாக சுற்றித் திரிந்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், கோத்ரா ரெயில் எரிப்புத் தொடர்பாக கைது செய்யப்பட்ட 94 பேர்களும் கடந்த 2002 ஆம் ஆண்டிலிருந்தே கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாக்க்கப்பட்டு கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு மோடி முஸ்லிம் இனப் படுகொலைக்கு காரணமானவர் என தனது அறிக்கையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தீர்ப்பையொட்டி குஜராத் மாநிலத்தில் பிரச்சனைக்குரிய பகுதிகளில் குறிப்பாக கோத்ரா, அஹமதாபாத்தில் மாநில சிறப்பு ரிசர்வ் படை போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

0 கருத்துகள்: