எகிப்தில் அரச எதிர்ப்பாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் வெற்றிபெற்றதைஅடுத்து, அந்நாட்டை பின் பற்றி யேமன் நாட்டிலும் அரச எதிர்ப்பு அதிகரித்துள்ளது.தலைநகர் சானாவில் அதிபர் மாளிகையை முற்றுகையிடுவதற்காக ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் நடத்திச்சென்ற ஊர்வலத்தின் மீது அரச
ஆதரவாளர்கள் நடத்திய திடீர் தாக்குதலால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.
முபாரக் சர்வாதிகாரம் ஒழிந்தது. இப்போது அதிபர் அலி அப்துல்லாவின் முறை என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிடுவதை அங்கு கேட்க முடிவதாக ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். யேமன் அதிபர் அலி அப்துல்லா சாலெஹ் மற்றும் அவரது குடும்பத்தினர் இராணுவ சர்வாதிக ஆட்சி மூலம் யேமனை சீரழித்துவருவதாக குற்றம் சுமத்தியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், குறிப்பாக அலி அப்ல்லாவின் மூத்த மகன், அஹ்மட் அலி விஷேட அதிரடிப்படையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
சானா பல்கலைக்கழகத்திலிருந்து அதிபர் மாளிகைக்கு ஊர்வலமாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், அலி அப்துல்லாவின் ஆதரவாளர்களுக்கும் இடையே வன்முறை வெடித்ததால் நிலைமை மோசமாகியுள்ளது. அலி அப்துல்லாவின் ஆதரவாளர்கள் அதிபர் மாளிகையில் தடுப்புவேலி அமைத்து எதிர்ப்பாளார்கள் உள்நுழைவதை தடுத்துள்ளனர். இதனால் அங்கு கலவரம் முற்றியுள்ளது.
இதேவேளை முபாரக் போன்று கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஆட்சி நடத்திவரும் அபி அப்துல்லா சலேஹ், கடந்த பெப்ரவரி 2ம் திகதி தனது ஆட்சியை கைம்மாற்ற முன்வந்தார்.
எனிமும் 2013 இல் அவர் எப்படியும் பதவியிலிருந்து விலகுதல் வேண்டும். அதோடு அப்பதவியை அவருடைய புதல்வருக்கும் கொடுக்க கூடாது எனக்கூறி ஆட்சி பொறுப்பை ஏற்க மறுத்திருந்தது எதிர்க்கட்சி.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக