தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.2.11

குவைத்தில் அரசுக்கெதிராக போராட்டம் நடத்த அழைப்பு

குவைத்.பிப்.7:அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையை கண்டித்து போராட்டம் நடத்த குவைத்தில் இளைஞர்களின் அமைப்பொன்று அழைப்பு விடுத்துள்ளது.

ஃபிஃப்த் ஃபென்ஸ்(Fifth Fence) என்ற அமைப்புதான் அரசை வெளியேற்ற வேண்டுமெனக்கோரி பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ட்விட்டர் சமூக இணை நெட்வர்க்கில் இதுக்குறித்த செய்தி வேகமாக பரப்பப்பட்டு வருகிறது. பாராளுமன்றத்திற்கு வெளியே நாளை(செவ்வாய்கிழமை) 11 மணிக்கு இப்பேரணி நடைபெறுவதாக அந்த செய்தி கூறுகிறது.

போலீஸ் ஸ்டேசனில் சித்திரவதைக்கு ஆளான இளைஞர் ஒருவர் மரணித்ததுக் குறித்து செவ்வாய்க்கிழமை உள்துறை அமைச்சர் ஷேக் ஜாபிர் காலித் அல் ஸபாஹ் கேள்விக் கணைகளை சந்திக்கவிருக்கும் சூழலில் பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைக்க அரசு தீர்மானித்துள்ளது.

ஆறுவாரத்திற்கு பிறகு பாராளுமன்றத்தை கூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இளைஞர் ஒருவர் இறந்ததுத் தொடர்பான விசாரணையை தாமதித்த அரசு ஜனநாயக விரோத நடவடிக்கையை பின்பற்றுவதாக எதிர்கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

35 வயதான முஹம்மது கஸ்ஸாய் அல் முதைரியின் உடல் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி போலீஸ் ஸ்டேசனில் மரணித்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுத்தொடர்பான வழக்கை விசாரித்த பாராளுமன்ற கமிட்டி முஹம்மது கஸ்ஸாய் 6 நாட்களாக சித்திரவதைச் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக தெரிவித்தது. இதுத்தொடர்பாக 16 போலீஸார் கைதுச் செய்யப்பட்டனர்.

குவைத் ஆளும் அரசைச் சார்ந்த ஷேக் ஜாபர் இச்சம்பவத்தைத் தொடர்ந்து ராஜினாமாச் செய்தபொழுதிலும், அவரை பதவியில் தொடர குவைத் கேபினட் கேட்டுக்கொண்டது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


0 கருத்துகள்: