தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.10.11

சட்டசபை தேர்தலில் பறிமுதல் செய்யப்பட்ட தொகை கதி?


சட்டசபைத் தேர்தலின் போது நடந்த சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்ட, 58 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள், கோர்ட்களிலும், வருமான வரித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலின் போது, தேர்தல் கமிஷனின் கெடுபிடி நடவடிக்கைகளால், கணக்கில் காட்டப்படாத பணம், பொருட்கள்,
வாக்காளர்களுக்கு வழங்க வைத்திருந்த பணம் போன்றவை, அதிகளவில் கைப்பற்றப்பட்டன. இதன்படி, ரொக்கமாக 36 கோடி ரூபாயும், பொருட்களாக 22 கோடி ரூபாய் மதிப்புக்கும் பறிமுதல் செய்யப்பட்டன.இவற்றில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வைத்திருந்த போது பிடிபட்ட தொகை மற்றும் பொருட்கள் தொடர்பாக, கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால், அவை கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு, அரசுக் கருவூலங்களில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால், தேர்தல் சம்பந்தமின்றி, கணக்கில் காட்டப்படாமல், வியாபாரம் காரணமாகவோ அல்லது வேறு செலவுகளுக்கோ எடுத்துச் செல்லப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட தொகை மற்றும் பொருட்கள், வருமான வரித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.இவை தொடர்பாக, வருமான வரித் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், உரிய வரி செலுத்தியதற்கான ஆதாரங்கள் அல்லது வருமானத்துக்கான உரிய ஆதாரங்களை அளித்தால், அவை உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்படும்.
தற்போது நடந்து வரும், திருச்சி மேற்குத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், இதுவரை 51 லட்ச ரூபாய் ரொக்கமும், 34 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது. சுவர் விளம்பரங்கள் தொடர்பாக, 220 வழக்குகளும், வாகனங்களை விதி மீறி பயன்படுத்தியதற்காக பத்து வழக்குகளும், பதிவு செய்யப்பட்டுள்ளன.

0 கருத்துகள்: