தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.10.11

கடாபி உடல் சிற்றா நகரில் அடக்கம்


கடாபியின் கடைசி ஏழு நாட்கள் நகர்வுகளை விளக்கும் இணையப்பக்கமொன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் தனது சகாகக்களுக்கு தொவித்த கடைசி விருப்பங்கள் வெளியாகியுள்ளன. போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது தனக்கு மரணம் ஏற்பட்டால் தான் பிறந்த சிற்றா நகரிலேயே தனது உடலம் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று அவர் விரும்பியுள்ளார். மேலும் தான் போரில் இறந்தாலும் நேட்டோவுக்கும், மற்றைய எதிரிகளுக்கும் எதிரான போராட்டத்தை தனது குடும்பத்தினர் முன்னெடுப்பர் என்று தெரிவித்த அவர் லிபிய மக்கள் அன்னியரை விரட்டும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். மேலும் கடாபி தனது இறுதிக்கிரியைகள் இஸ்லாமிய முறைப்படியே நடக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் என்று அத்தகவல்கள் கூறுகின்றன.அதேவேளை தற்போது ஆட்சிக்கு வந்துள்ள லிபிய போராளிகள் அரசு நேற்று விடுத்த அறிவிப்பு மேலை நாடுகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. லிபிய மேல்மட்ட அரசு இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களின்படியே தமது நாட்டின் நிர்வாகம் அமையும் என்று கூறியுள்ளது. எந்தஒரு இஸ்லாமிய நாடும் முழுமையான இஸ்லாமிய ஷரீஅத் தின்படி ஆட்சிநடத்துவதை மேலைநாடுகள் விரும்புவதில்லை இந்தச் சட்டத்தின் அடிப்படையிலேயே தமது ஆட்சி நடைபெறுமென லிபியா புதிய அரசு அறிவித்தது தமக்கு பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக டென்மார்க் ஆளும் கட்சியின் வெளிநாட்டு பேச்சாளர் ஜெப்ப கொபூட் தெரிவித்தார். இதற்காகவா லிபியாவில் குண்டு வீசினோம்ஆட்சிமாற்றம் ஏற்படுத்தினோம் என்பது அவரது கவலையில் கருத்து. லிபியப் போர் கடைசியில் பேயை விரட்டி பிசாசை ஆட்சிக்குக் கொண்டுவந்த கதையாக முடிந்திருக்கிறது. என தெரிவிக்கிறார்.

0 கருத்துகள்: