தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.10.11

லிபிய மக்களுக்காக இறுதிவரை போராடுவேன் : கடாபியின் மகன் சூளுரை


லிபியாவின் முன்னாள் அதிபர் மௌமர் கடாபியின், மகன்களில் ஒருவரான சயிப்
அல் இஸ்லாம், தனது தந்தையை கொன்றவர்களை பழிவாங்க போவதாக அறிவித்துள்ளார்.

சிரியாவிலிருந்து ஒளிபரப்பாகும் அல்ராய் தொலைக்காட்சிக்கு நேற்று விடுத்த ஒலிநாடாவொன்றில் சயிப் அல் இஸ்லாம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

'நான் இன்னமும் லிபியாவில் தான் வாழ்கிறேன். போராட்டம் தொடரும். பழிவாங்க தயாராகிறேன்' எனவும் அவர் அறிவித்துள்ளார்.
முன்னதாக, அல் இஸ்லாம் கைது செய்யப்பட்டதாகவும், ஆபத்தான நிலையில் மருத்துவ சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டதாகவும் லிபிய புரட்சிப்படை அறிவித்திருந்தது.

கடாபிக்கு 2 மனைவிகள் மூலம் 7 மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்தனர். அவர்களில் இருவர் மாத்திரமே குடும்பத்துடன் அல்ஜசீராவுக்கு தப்பி சென்றுள்ளனர்.

நேட்டோ படை குண்டு வீச்சிலும், புரட்சிப்படையினர் தாக்குதலிலும்,  முட்டாசிம் கடாபி மற்றும் ஏனைய மகன்கள் பலர் கொல்லப்பட்டுவிட்டனர்.

இந்நிலையில், சிரிய தொலைக்காட்சியில் அவர் விடுத்துள்ள, அறிவிப்பில், நான் சாகவில்லை, இன்னமும் உயிரோடு இருக்கிறேன். லிபிய மக்களுக்காக இறுதிவரை போராடுவேன் என அல் இஸ்லாம் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்துகள்: