தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.1.12

ஈரான் விவகாரம் அமெரிக்காவுடன் ரஷியா முரண்பாடு


ஈரானிலும், சிரியாவிலும் அமெரிக்கா தன் படைகளை நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.அமெரிக்கா ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக அவற்றின் நிறுவனங்களின் மீது கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.இஸ்லாமியக் குடியரசை எதிர்த்து கடந்த வாரம் தடை உத்தரவை மேலைநாடுகள் விதித்தன. இத்தடையால் எண்ணெய் வர்த்தகம்பாதிக்கப்படும். ஈரானின் அணு ஆயுதப்

பிரச்னைகளை தீர்ப்பதற்காகவும், சர்வதேசச் சமூகம் எடுக்கும் முயற்சிகளை பலவீனப்படுத்தும் விதமாகவும் ஐ.நா.பாதுகாப்புக்குழு ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று ரஷ்ய வெளிவிவகாரத்துறையின் இணை அமைச்சரான கத்தி லோவ் கூறினார். இந்த வாரத்தில் இது ரஷ்யாவின் மூன்றாவது கண்டனம் ஆகும்.
மேலை நாட்டாரின் கொள்கைக்கும், ரஷ்யாவின் கொள்கைக்கும் இடையே வேறுபாடு இருப்பதால், ஐ.நா பாதுகாப்புக் குழுவின் கருத்துகளை தங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று கத்தி லோவ் தெரிவித்தார். அல் அசாத்தை ஒழிக்கத் திட்டமிடும் மேலைநாட்டாருடன் ரஷ்யா இணையாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

0 கருத்துகள்: