ஆப்கானில் கொல்லப்பட்ட தலிபான் போராட்டக்காரர்களின் சடலத்தின் மீது அமெரிக்க வீரர்கள் சிறுநீர் கழித்து மகிழ்ச்சி தெரிவிக்கும் வீடியோ காட்சி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.தலிபான் போராட்டக்காரர்களை ஒடுக்கும் விதத்தில் 20 ஆயிரம் அமெரிக்க இராணுவ வீரர்கள் ஆப்கானிஸ்தானில் களமிறக்கப்பட்டனர். அவர்கள் காந்தகார் மற்றும் ஹெல்மாண்ட் மாகாண பகுதிகளில் உள்ள
தலிபான்களை கொலை செய்தனர்.இந்நிலையில்
நேற்று முன்தினம் ஓன்லைன் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த தலிபான் வீரர்கள் சடலம் மீது அமெரிக்க கடற்படையினர் மகிழ்ச்சி களிப்பில் சிறுநீர் கழிப்பது போன்று இடம்பெற்றது.
தலிபான்களை கொலை செய்தனர்.இந்நிலையில்
நேற்று முன்தினம் ஓன்லைன் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த தலிபான் வீரர்கள் சடலம் மீது அமெரிக்க கடற்படையினர் மகிழ்ச்சி களிப்பில் சிறுநீர் கழிப்பது போன்று இடம்பெற்றது.
அதில் ஒரு அமெரிக்க வீரர், நமக்கு ஆனந்தம் தரும் நாள் என்று எகத்தாளமாகக் கூறுவதும் வெளியாகியிருக்கிறது. இது உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆப்கான் ஜனாதிபதி கர் கூறுகையில், இக்காட்சி எங்களுக்கு மன உளைச்சலைத் தந்திருக்கிறது. இறந்தவர்கள் சடலத்தை அவமானப்படுத்தும் இச்செயல் மனிதாபிமானம் அற்றது என்றார்.
இதுகுறித்து அமெரிக்க இராணுவத் தளபதி லியோன் பனெட்டா, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாயிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனும் கண்டனம் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள தலிபான் அமைப்பு இதனால் அரசியல் ரீதியிலான நடவடிக்கைகள் எதுவும் பாதிக்கப்படாது என கூறியுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக